தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏ.ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள ’பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைப்பெற்றது. இந்த விழாவில் விஜய் உள்ளிட்டபடக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த விழாவை நடிகர் மிர்ச்சி சிவா மற்றும் ரம்யா ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். இந்த விழாவின் முதல் நபராக மேடையேறிய நடிகர் ஆனந்தராஜ் அதிரடியாக பேசினார்.அவரின் பேச்சில் அரசியல் வாடை அதிகம் இருந்தது.

sdzg

Advertisment

இதுதொடர்பாக அவர் பேசும்போது, " பிகில் திரைப்படத்துக்கு முன்புவரை விஜய்யை நான்விஜய் அண்ணா என்று அழைத்து வந்தேன்.ஆனால் பிகில் படப்பிடிப்பின் போது எனக்கும் அவருக்கும் மிகவும் நெருக்கமான நட்பு ஏற்பட்டதால்இனி அவரை நண்பன் என்றே அழைக்க இருக்கிறேன். இன்னும் 5 ஆண்டுகளில் விஜய்யின் மகனே நடிக்க வந்து விடுவார். அந்த சமயத்தில் மக்கள் நினைத்தால் விஜய் வேறு ஒரு இடத்தில் இருப்பார் என்று தெரிவித்தார். ஆனந்தராஜின் இந்த பேச்சை கேட்டவுடன் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.