மும்பையிலுள்ள கோராகான் கிழக்கு பகுதியிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக வந்த புகாரை அடுத்து போலீஸார் நடத்திய சோதனையில் பாலிவுட் நடிகை மற்றும் மாடல் இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

amrita

இந்த சோதனையின்போது ஹோட்டலில் இருந்த 2 சிறுமிகளை போலீஸார் மீட்டுள்ளனர். இந்த தவறான தொழிலுக்கு சிறுமிகளை செய்ய வைத்த விவகாரத்திற்காக பாலிவுட் நடிகை அம்ரிதா தனோவா(வயது 32) மற்றும் மாடல் அழகி ரிச்சா சிங் ஆகியோரை மூன்று வழக்குகளின் கீழ் கைது செய்துள்ளனர்.

Advertisment

அம்ரிதா தனோவா என்பவர் என்னுடைய முன்னாள் காதலன் பிக்பாஸ் 13 நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த ஆர்ஹான் கான் என்றும், அவர் தன்னை ஏமாற்றி ஐந்து லட்சம் பணத்தை பெற்றதாகவும் அதை திருப்பி தராமல் ஏமாற்றி வருவதாக கூறி, சமீபத்தில் பிரபலமானார். ஆனால், ஆர்ஹான் கான் அவரை நான் காதலிக்கவே இல்லை என்று கூறியுள்ளார்.

இவர் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான அன்லிமிடட் நாஷா, பிரவீன் பாப்பி மற்றும் தி வேர்ல்ட் ஆஃப் ஃபேஷன் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பதாக ஐஎம்டிபியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment