Skip to main content

மனு ஸ்மிருதி விவகாரம் : அமிதாப் பச்சன் மீது வழக்குப் பதிவு

Published on 03/11/2020 | Edited on 04/11/2020
amithab

 

இந்தி சினிமாவின் உச்ச நட்சத்திரம் அமிதாப் பச்சன். இவர் ’கவுன் பனேகா க்ரோர்பதி’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். கவுன் பனேகா க்ரோர்பதி, பொது அறிவு கேள்விகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் ஒரு விளையாட்டு நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியின் 12 ஆவது சீசன் செப்டம்பர் மாதம் தொடங்கி நடந்து வருகிறது.  

 

இந்தநிலையில், இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்வியும், அதற்குப்பின் அமிதாப் தெரிவித்த கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில், சமூக ஆர்வலர் பேஜாவாடா வில்சனும், நடிகர் சோனியும் கலந்து கொண்டனர். அப்போது, அவர்களிடம்

1927 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி அம்பேத்கரும், அவரது தொண்டர்களும் எந்தப் புத்தகத்தை எரித்தனர்? என்ற கேள்வியைக் கேட்டார் அமிதாப் பச்சன். அவர்களுக்கு,

அ) விஷ்ணு புராணம்  

ஆ) பகவத் கீதை  

இ) ரிக் வேதம்  

ஈ) மனுஸ்மிருதி 

என நான்கு விடைகள் தரப்பட்டிருந்தது. சிறப்பு விருந்தினர்கள் ’மனு ஸ்மிருதி’யை தேர்ந்தெடுத்து வெற்றி பெற்றனர். 

 

இதைத் தொடர்ந்து பேசிய அமிதாப் பச்சன், ”1927ல் அம்பேத்கர், பண்டைய இந்து நூலான மனு ஸ்மிருதி சாதிய பாகுபாட்டையும், தீண்டாமையையும் சித்தாந்த ரீதியாக நியாயப்படுத்துவதாகக் கூறி அதனைக் கண்டித்ததோடு அதன் பிரதிகளையும் எரித்தார்” எனக் கூறினார். அதைத் தொடர்ந்து அமிதாப் பச்சன் கேட்ட கேள்வியும், அதன் பிறகு அவர் பேசியதும் இந்து மத மக்களைப் புண்படுத்துவதுபோல் இருப்பதாக சர்ச்சை எழுந்தது.

 

இதைத் தொடர்ந்து மஹாரஷ்டிராவைச் சேர்ந்த பா.ஜ.கவின் சட்டமன்ற உறுப்பினர் அபிமன்யு பவார், இந்து மத உணவுர்களைப் புண்படுத்தியதாகவும், ஒற்றுமையாய் வாழும் இந்து மற்றும் புத்த மதத்தினரிடையே அமைதியைக் குலைக்க முயற்சித்ததாகவும் அமிதாப் பச்சன் மற்றும் சோனி தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது போலீசில் புகாரளித்தார். அதனைத் தொடர்ந்து அமிதாப் பச்சன் மீதும், சோனி தொலைக்காட்சி நிறுவனம் மீதும் தற்போது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

 

  

 

                     

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.