
மோகன்லால் நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான படம் 'த்ரிஷ்யம்'. மலையாளத்தில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து தற்போது 'த்ரிஷ்யம்' படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. கரோனா அச்சுறுத்தலால் ஓடிடி தளத்தில் வெளியான இப்படம், முதல் பாகத்திற்கு இணையான வரவேற்பை பெற்று வரும் நிலையில், நடிகர் மோகன் லால் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு புத்தகம் ஒன்றைப் பரிசளித்துள்ளார். இந்தப் புத்தகத்தைப் பெற்றுக்கொண்ட அமிதாப் பச்சன், இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்...

"மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன் லால். எனக்கு மிகுந்த அபிமானம் உள்ள ஒரு நபர். அவர் எனக்கு ஒரு புத்தகத்தை அனுப்பியுள்ளார். அவரது மகள் விஸ்மயா எழுதி, வரைந்த‘க்ரெய்ன்ஸ் ஆஃப் ஸ்டார்டஸ்ட்’என்ற புத்தகம். கவிதைகள் மற்றும் ஓவியங்களின் மிகவும் ஆக்கபூர்வமான உணர்திறன் கொண்ட, பயணம் நிறைந்த புத்தகம். திறமை என்பது ரத்தத்தில் கலந்துள்ளது! அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார்.
இதற்குப் பதில் அளித்து மோகன் லாலும் ட்வீட் செய்துள்ளார். அதில்..." காலை வணக்கம் சார். நீங்கள் பகிர்ந்த ட்வீட்டுக்கு மிகவும் நன்றி. உங்களிடமிருந்து வந்திருப்பது உயர்ந்த இடத்தில் இருந்து வந்த பாராட்டு. எனக்காக உங்கள் நேரத்தை ஒதுக்கியதற்கு நன்றி" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)