Skip to main content

ஒரே படத்தில் அமீர், ஷாரூக், சல்மான்!!!

Published on 21/11/2020 | Edited on 21/11/2020

 

amir khan

 

 

‘தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்’ படத்திற்கு பிறகு அமீர்கான் நடிக்கும் படம்  ‘லால் சிங் சட்டா’. இது 1994ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான ‘ஃபாரஸ்ட் க்ரம்ப்’ படத்தின் ரீமேக் ஆகும். அமெரிக்க அரசியல் வரலாற்றை ஒட்டியதுபோன்று உருவாக்கப்பட்ட இந்த படம், பல விருதுகளையும், நல்ல வசூலையும் பெற்றது. இந்நிலையில் இந்தப் படத்தை இந்தியாவிற்கு ஏற்றார்போல கதையில் திருத்தம் செய்து எடுக்க திட்டமிட்டு கடந்த ஒரு வருடமாக ஷூட்டிங் நடைபெற்று வந்தது. 

 

இந்த வருடம், டிசம்பர் மாதம் 20ஆம் தேதி படம் ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக தெரிவித்து அதனுடன் லால் சிங் சட்டா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் அவருடைய கடந்த வருட பிறந்தநாளன்று வெளியிட்டார் அமீர்கான். இப்படத்தில் அமீருடன் பல பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். அந்த வகையில் விஜய் சேதுபதியும், அமீருடன் இணைந்து இப்படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

கரோனா அச்சுறுத்தலால் மூன்று மாத ஷூட்டிங் தடைப்பட்டது. கரோனா அச்சுறுத்தல் சமயத்திலேயே அமீர்கான் தனது படத்தின் ஷூட்டிங்கை துருக்கியில் நடத்த திட்டமிட்டு, தொடங்கினார்.

 

இந்நிலையில் இந்த படத்தில் ஷாரூக் கான் கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கிறார் என்று தகவல் வெளியானது. இந்த படத்தின் ஷூட்டிங்கில் நடித்து கொடுத்துவிட்டு அதன் பின்னர்தான் துபாய்க்கு ஐபிஎல் போட்டிகளை பார்க்க சென்றதாக சொல்லப்பட்டது. அமீர்கான் மற்றும் ஷாரூக் இருவரும் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை என்று கடந்த வாரம் சமூகவலைதளங்களில் தகவல் வெளியான நிலையில், சல்மான்கானும் இப்படத்தில் கௌரவ தோற்றத்தில் நடிக்க இருப்பதாக புதிதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. விரைவில் இந்த இரண்டு தகவல்கள் குறித்தான அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறுதிச்சுற்றில் தோல்வி - மல்யுத்த வீராங்கனை தற்கொலை?

Published on 18/03/2021 | Edited on 18/03/2021

 

rithika

 

இந்தியாவின் புகழ்பெற்ற மல்யுத்த குடும்பம் மகாவீர் சிங் போகாட்டின் குடும்பம். மல்யுத்த வீரரான இவர், தனது பெண்களையும் மல்யுத்த வீராங்கனைகளாக உருவாக்கியவர். அமிர்கான் நடிப்பில் வெளிவந்த ‘தங்கல்’ படம், மகாவீர் சிங் போகாட் மற்றும் அவரது பெண்களின் நிஜக்கதையை தழுவி எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மகாவீர் சிங் போகாட்டின் மகள்கள் கீதா, பபிதா ஆகியோர் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றவர்கள். இவர்களின் ஒன்றுவிட்ட சகோதரியான ரித்திகா போகாட், மகாவீர் சிங் போகாட்டிடம் மல்யுத்த பயிற்சி பெற்று வந்தார். இந்தநிலையில் அவர் மார்ச் 17ஆம் தேதி உயிரிழந்துள்ளார். மார்ச் 14ஆம் தேதி நடந்த ஒரு மல்யுத்த போட்டியின் இறுதிச்சுற்றில், ஒரு புள்ளியில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட வேதனையில் அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

 

ரித்திகாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள மத்திய இணை அமைச்சர் விஜய் குமார் சிங், “சில தசாப்தங்களுக்கு முன்னர் இருந்த இடத்திலிருந்து உலகம் தற்போது மாறிவிட்டது. விளையாட்டு வீரர்கள் முன்பு இல்லாத அளவுக்கு அழுத்தங்களை இப்போது எதிர்கொள்கின்றனர். இந்த அழுத்தங்களை சமாளிப்பது அவர்களின் பயிற்சியில் ஒரு முக்கியப் பகுதியாக இருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

படம் ரிலீஸ் வரை ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்! - அமீர் அதிரடி முடிவு!

Published on 02/02/2021 | Edited on 02/02/2021

 

vfasfas

 

‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ படத்திற்குப் பிறகு அமீர்கான் நடிக்கும் படம் ‘லால் சிங் சட்டா’. இது 1994ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் ரீமேக் ஆகும். அமெரிக்க அரசியல் வரலாற்றை ஒட்டியதுபோன்று உருவாக்கப்பட்ட இந்தப் படம், பல விருதுகளையும், நல்ல வசூலையும் பெற்றது. இந்நிலையில் இந்தப் படத்தை இந்தியாவிற்கு ஏற்றார்போல கதையில் திருத்தம் செய்து எடுக்க திட்டமிட்டு, கடந்த ஒரு வருடமாக ஷூட்டிங் நடைபெற்று வந்தது. இதில் அமீர்கான் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகர்கள் ஷாரூக் கானும், சல்மான் கானும் கவுரவ கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

 

fasfsa

 

சென்ற வருடமே இப்படம் வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. பின்னர் தளர்வுகளுக்குப் பின் மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எனவே இந்த வருடம் கிறிஸ்துமஸ் தினத்தன்று படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இந்தப் படம் வெளியாகும் வரை மொபைல் ஃபோன் பயன்படுத்தப் போவதில்லை என்று அமீர்கான் முடிவெடுத்துள்ளதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. வேலை நேரத்தில் மொபைல் அழைப்புகள் அவருக்குத் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்துவதால் அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக அமீர்கான் தான் நடிக்கும் கதாபாத்திரமாகவே படப்பிடிப்பு முடியும் வரை இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.