Skip to main content

'இது உண்மை இல்லை' - விளக்கமளித்த விஜய் சேதுபதி பட இயக்குநர்

Published on 29/07/2022 | Edited on 29/07/2022

 

allu arjun in pushpa 2 - director Buchi Babu Sana explained

 

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் 'புஷ்பா – தி ரைஸ்'. இப்படத்தில் ராஷ்மிகா மந்தானா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பான் இந்தியா படமாக வெளியான இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இவர் இசையில் வெளியான அனைத்துப் பாடல்களும் நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக சமந்தா சிறப்புத் தோற்றத்தில் நடனமாடிய 'ஊ...சொல்றியா மாமா' பாடலை இளைஞர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'புஷ்பா 2' படத்திற்கான ஆரம்பக் கட்ட பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. 

 

இதனிடையே சில தினங்களுக்கு முன்பு 'புஷ்பா 2' படத்தின் திரைக்கதை விவாதத்தில் இயக்குநர் புச்சி பாபு சனா இணைந்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் புச்சி பாபு சனா மற்றும் 'புஷ்பா 2' இயக்குநரும் கதை விவாதத்தில் இருப்பது போல் ஒரு புகைப்படமும் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இணையத்தில் வைரலான புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து இந்த தகவல் தொடர்பாக விளக்கமளித்துள்ளார். அந்த பதிவில், "சுகுமார் சார் என் படக் கதைக்கு உதவ வந்தார். சுகுமார் சாரின் படத்தின் கதையை உட்கார்ந்து விவாதிக்கும் தகுதி  எனக்கு இல்லை" என தெரிவித்துள்ளார். 

 

புச்சி பாபு சனா, இயக்குநர் சுகுமாரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு பஞ்ச வைஷ்ணவ் தேஜ், கிருத்தி ஷெட்டி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற 'உப்பெனா' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘புஷ்ப ராஜ்...’ - அடுத்தடுத்த பாகங்கள் குறித்து அல்லு அர்ஜுன்

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
allu arjun about pushpa 3

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் வெளியான படம் 'புஷ்பா – தி ரைஸ்'. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பான் இந்தியா படமாக வெளியான இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். இவர் இசையில் வெளியான அனைத்துப் பாடல்களும் நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக சமந்தா சிறப்புத் தோற்றத்தில் நடனமாடிய 'ஊ...சொல்றியா மாமா' பாடலை இளைஞர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் ‘புஷ்பா தி ரூல்’ என்ற தலைப்பில் தற்போது உருவாகி வருகிறது. படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முன்னோட்ட வீடியோ, கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ஆகஸ்ட் 15ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 74வது பெர்லின் சர்வதேச திரைப்படவிழாவில் புஷ்பா படம் திரையிடப்படுகிறது. இதில் கலந்து கொண்ட அல்லு அர்ஜுன், புஷ்பா படத்தின் மூன்றாம் பாகம் குறித்து பேசியுள்ளார். இது தொடர்பாக பிரபல ஆங்கில இணையதளத்திற்கு பேட்டியளித்த அவர், “நிச்சயமாக புஷ்பா படத்தின் மூன்றாம் பாகத்தை எதிர்பார்க்கலாம். நாங்கள் அதை ஒரு தொடராக உருவாக்க விரும்புகிறோம். அற்புதமான யோசனைகளும் திட்டங்களும் அடுத்தடுத்து உள்ளன. புஷ்பா 1 இல் பார்த்ததை விட புஷ்பா 2வில் வித்தியாசமான புஷ்பாவை பார்ப்பீர்கள். அதைவிட பெரிய படமாகவும் இருக்கும்” என்றார். 

Next Story

‘காதலே காதலே...’ - ‘96’ பட ரசிகர்களுக்கு குட் நியூஸ்

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
vijay sethupathi trisha 96 movie re released

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் பிரேம் குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் 96. மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றது. படமும் காதலர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரிதும் கொண்டாடப்பட்டது. மேலும் விமர்சன ரீதியாகவும் பாராட்டைப் பெற்றது. 

இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியானது. அதன் பிறகு தற்போது வரை எந்த அப்டேட்டும் வரவில்லை. இந்த நிலையில் இப்படம் தற்போது ரீ ரிலீஸாகவுள்ளது. காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழக அளவில் இப்படம் ரீ ரிலீஸாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் இப்பட ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.