Skip to main content

ஹாலிவுட்டில் இருந்து அல்லு அர்ஜுனுக்கு அழைப்பு ; வெளியான மாஸ் தகவல்

Published on 02/09/2022 | Edited on 02/09/2022

 

Allu Arjun has been offered a Hollywood film

 

அல்லு அர்ஜுன், 'புஷ்பா – தி ரைஸ்' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'புஷ்பா –  தி ரூல்' படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. பூஜை விழாவில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தானா கலந்துகொள்ளவில்லை. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. 'புஷ்பா – தி ரைஸ்' படத்தின் வெற்றிக்கு பிறகு அல்லு அர்ஜுனுக்கு படவாய்ப்புகள் குவிந்து வருவதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 

 

இந்நிலையில் அல்லு அர்ஜுனிடம் பிரபல ஹாலிவுட் இயக்குநர் கதை சொல்லியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நியூயார்க்கில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின அணிவகுப்பில் கலந்துகொண்டார் அல்லு அர்ஜுன். அப்போது சூப்பர் ஹீரோ படத்தை இயக்கிய இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஒருவரும் அல்லு அர்ஜுனும் சந்திப்பு மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த சந்திப்பில் அந்த இயக்குநர், தான் இயக்கும் படம் குறித்து அல்லு அர்ஜுனிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சமந்தாவைத் தொடர்ந்து ஸ்ருதிஹாசனும் விலகல் - ரசிகர்கள் குழப்பம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Following Samantha, Shruti Haasan also quit in chennai story

2021ஆம் ஆண்டு சமந்தா நடிப்பில் ஹாலிவுட் இயக்குநர் பிலிப் ஜான் இயக்கத்தில் சென்னை ஸ்டோரி என்ற தலைப்பில் ஒரு சர்வதேச படம் உருவாகுவதாக அறிவிப்பு வெளியானது. இப்படம் டிமேரி என் முராரி எழுத்தில் 2004ஆம் ஆண்டு வெளியான ‘தி அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆஃப் லவ்’ என்ற ரொமாண்டிக் காதல் நாவலைத் தழுவி எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இதன் படப்பிடிப்பு தொடங்கியிருந்த சூழலில் சமந்தா விலகினார். இதற்கு தசை அலர்ஜி பாதிப்பு காரணம் எனக் கூறப்பட்டது. இதையடுத்து ஸ்ருதிஹாசன் கமிட்டானார். மேலும் இங்கிலாந்தைச் சேர்ந்த விவேக் கல்ரா, கெவின் ஹார்ட், ஜான் ரெனோ உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க கமிட்டாகினர்.

Following Samantha, Shruti Haasan also quit in chennai story

சமீபத்தில் இதன் படப்பிடிப்பிலும் ஸ்ருதிஹாசன் கலந்து கொண்டார். இந்த நிலையில் ஸ்ருதிஹாசனும் தற்போது சென்னை ஸ்டோரி படத்திலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து இப்படத்தில் கமிட்டாகி வரும் நடிகைகள் விலகிவருவது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.  

Next Story

காளி கெட்டப்பில் மிரட்டும் அல்லு அர்ஜுன்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
allu arjun pushpa 2 teaser released

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன், 'புஷ்பா’ படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். இந்த நிலையில், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதை முடித்துவிட்டு அட்லி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று பிறந்தநாள் காண்கிறார் அல்லு அர்ஜுன். அவருக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் உள்பட பலரும் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் புஷ்பா 2 படக்குழு அல்லு அர்ஜுனுக்கு வாழ்த்து தெரிவித்து படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது. டீசரில் அல்லு அர்ஜுன், காளி கெட்டப்பில் திருவிழாவில் எதிரிகளை மிரட்டி சண்டை போடும் காட்சி இடம்பெறுகிறது.

‘புஷ்பா தி ரூல்’ என்ற தலைப்பில் உருவாகி வரும் இப்படத்தை முதல் பாகத்தை இயக்கிய சுகுமாரே இயக்கி வருகிறார். ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறது. இப்படத்தின் முன்னோட்ட வீடியோ மற்றும் ஃபர்ஸ்ட் லுக், கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இப்போது ஃபர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்ற அதே காளி கெட்டப்பில் படத்தின் டீசரிலும் அல்லு அர்ஜுன் தோன்றுகிறார்.