akshay kumar

‘பாடும் நிலா பாலு' என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் (74 வயது) மறைந்தார்.

Advertisment

கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். அதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். மேலும் எக்மோ மற்றும் உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சைபெற்று வந்த நிலையில் எஸ்.பி.பி. உயிர்பிரிந்தது. இன்று மதியம் 01.04 மணிக்கு எஸ்.பி.பி உயிர் பிரிந்ததாக எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் இந்தியாவிலுள்ள அனைத்து அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அனைவரும் எஸ்.பி.பி.யின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான சல்மான் கான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில், “பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருத்தப்பட்டேன். சில மாதங்களுக்கு முன்பு கூட ஒரு மெய்நிகர் இசை நிகழ்ச்சியின்போது நான் அவருடன் உரையாடினேன். அவர் மிகவும் அன்பானவர். வாழ்க்கை உண்மையிலேயே கணிக்க முடியாதது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.