Skip to main content

வெப் தொடரில் களமிறங்கிய கவின்... கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக்

Published on 01/02/2022 | Edited on 01/02/2022

 

AkashVaani first look poster goes viral

 

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்த கவின், ‘நட்புன்னா என்னனு தெரியுமா’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனையடுத்து, வினீத் வரப்பிரசாத் இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளியான லிப்ட் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 

 

இப்படத்தைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் ஈநாக் அபில் இயக்கத்தில் ஆகாஷ் வாணி என்ற இணைய தொடரில் கவின் நடிக்க உள்ளார். இதில், கவினுக்கு ஜோடியாக பிகில் பட பிரபலம் ரெபா மோனிக்கா ஜான் நடிக்கிறார். சரத் ரவி, தீபக் பரமேஷ், அபிதா வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். காதல் காமெடி ஜானரில் உருவாகவுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

காதலியுடன் கை கோர்க்கும் கவின்

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

kavin marriage update

 

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் கவின் கடைசியாக 'டாடா' படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று பலரது பாராட்டையும் பெற்றது. இதையடுத்து நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பாகத் தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். கவினுக்கு ஜோடியாக அயோத்தி படம் மூலம் கவனம் ஈர்த்த ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

 

இந்நிலையில் கவினுக்கு திருமணம் நடக்கவுள்ளது. வருகிற 20 ஆம் தேதி தனது நீண்ட நாள் காதலியான மோனிகா என்பவரை கரம் பிடிக்கவுள்ளார். இரு வீட்டார் சம்மதத்துடன் இத்திருமணம் நடைபெறவுள்ளது. இதனால் திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  

 

 

Next Story

கவின் நடிக்கும் அடுத்த படம்; இயக்குநராகும் நடன இயக்குநர்?

Published on 16/03/2023 | Edited on 16/03/2023

 

kavin next movie update

 

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் கவின் கடைசியாக 'டாடா' படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று பலரது பாராட்டையும் பெற்றது. இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடிக்க ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரித்திருந்தார். அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்க ஜென் மார்ட்டின் இசையமைத்திருந்தார். 

 

இந்த நிலையில் கவின் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை நடன இயக்குநர் சதீஷ் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ரோமியோ பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ராகுல் இப்படத்தை தயாரிப்பதாகவும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

 

நடன இயக்குநர் சதீஷ் உன்னாலே உன்னாலே, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுக்கவுள்ளதாகப் பரவலாக பேசப்படுகிறது.