Skip to main content

அஜித் பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை அதிரவைத்த பிரபல முன்னணி நடிகர்!

Published on 29/11/2019 | Edited on 29/11/2019

அஜித்குமார் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு தீபாவளிக்கு பண்டிகைக்கு வெளியான படம் வேதாளம். இந்த படத்தை சிவா இயக்க, அனிருத் இசையமைத்தார். இதில் ஆலுமா டோலுமா என்ற குத்துப்பாடல் செம பிரபலம். தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திராவிலும் இந்த பாடல் செம வைரலானது.
 

ajith kumar

 

 

இந்நிலையில் இந்த படம் வெளியாகி நான்கு வருடங்களாகியும் இந்த படத்தின் ஆலுமா டோலுமா பாடலுக்கு மவுசு குறையவில்லை. தெலுங்கின் முன்னணி பிரபல நடிகரான நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் ரசிகர்கள் ஏராளம். அவருடைய கான்ஃபிடன்ஸான நடன அசைவுகளுக்கும், ஆக்‌ஷன்களையும் ரசிக்காத ரசிகர்களே இல்லை.
 


அண்மையில் இவர் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் ஆலுமா டோலுமா பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரூலர் என்றொரு படத்தில் ட்ரைலர் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 நடிகர் அஜித் வீட்டின் தடுப்புச்சுவர் முற்றிலுமாக இடிப்பு

Published on 23/10/2023 | Edited on 23/10/2023

 

Actor Ajith house barrier completely demolished

 

சென்னையில் நடிகர் அஜித் வசித்து வரும் ஈஞ்சம்பாக்கம் வீட்டின் முகப்பு மற்றும் தடுப்புச் சுவரை நெடுஞ்சாலைத் துறை இடித்துள்ளது. 

 

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில்  சாலை விரிவாக்கம் மற்றும் மழை நீர் வடிகால் பணியானது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.  அக்கரை முதல் ஈஞ்சம்பாக்கம் வரை உள்ள நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள தனியாருக்குச் சொந்தமான இடத்தில் சிறிது தூரம் சாலை விரிவாக்கத்திற்காக நீதிமன்ற உத்தரவின் பேரில் பணிகள் நடைபெற்று வருகிறது. 

 

அதில், ஈஞ்சம்பாக்கம் பகுதியில் நடிகர் அஜீத் வசித்து வரும்  வீட்டின் முன்பு உள்ள முகப்பு மற்றும் தடுப்புச் சுவர் சாலை விரிவாக்க பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிக்காக இடிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்று அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட இடங்களில் மதில் சுவர்கள் இடிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே நெடுஞ்சாலைத் துறை தரப்பிலிருந்து சுவர்கள் இடிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், சிலருக்கு நெடுஞ்சாலைத்துறை தரப்பிலிருந்து புதியதாகத்  தடுப்புச் சுவர் கட்டி தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.  

 

 

Next Story

"இதையெல்லாம் அமிதாப், ஷாருக்கான், சல்மான் கான் யாராலும் செய்ய முடியாது" - ரஜினிகாந்த்

Published on 29/04/2023 | Edited on 29/04/2023

 

rajini about chandrababu naidu, balakrishna in ntr 100 day function

 

தெலுங்கு திரையுலகில் மறைந்த மூத்த நடிகர் மற்றும் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் என்.டி.ஆரின் 100வது பிறந்தநாள் விழா நேற்று (28.04.2023) விஜயவாடாவில் நடைபெற்றது. என்.டி.ஆரின் மகனும் பிரபல நடிகருமான பாலகிருஷ்ணா ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் மற்றும் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். தமிழகத்திலிருந்து விஜயவாடா சென்ற ரஜினிகாந்திற்கு பாலகிருஷ்ணாவும் சந்திரபாபு நாயுடுவும் பூங்கோத்து கொடுத்து பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.

 

பின்பு அந்த நிகழ்ச்சியில் ரஜினி தெலுங்கில் பேசினார். அவர் பேசுகையில், "இந்த கூட்டத்தை பார்க்கும்போது அரசியல் பேச வேண்டும் என்று மனதில் தோன்றுகிறது. ஆனால், அரசியல் பேச வேண்டாம் என எனது அனுபவம் சொல்கிறது. சந்திரபாபு எனக்கு 30 ஆண்டு கால நண்பர். சந்திரபாபு இந்திய அரசியல் மட்டுமின்றி உலக அரசியல் அனுபவம் வாய்ந்தவர். அரசியலில் அவர் ஒரு தீர்க்கதரிசி. ‘விஷன் 2020’ என்ற பெயரில் தகவல் தொழில்நுட்பத் துறையில் 1996 ஆம் ஆண்டில் ஒரு புரட்சியைக் கொண்டு வந்தார். அவருடைய ஆட்சிக்காலத்தில் தான் ஐதராபாத் நகரம் மாநகரமாக உருவெடுத்தது. இப்போது விஷன் 2047 என்ற பெயரில் தொலைதூரத் திட்டத்துடன் அரசியலில் பணியாற்றி வருகிறார். 

 

என்னுடைய மற்றொரு நண்பர் என்.டி.ஆரின் மகன் பாலகிருஷ்ணா. அவரை ரசிகர்கள் பாலகிருஷ்ணாவாக பார்ப்பதில்லை. என்.டி.ஆரின் மறு உருவமாகப் பார்க்கிறார்கள். அவர் தன் படத்தில் ஒற்றைப் பார்வையால் எதிரிகளை கொலை செய்கிறார். ஒரு கண் சிமிட்டினால் போதும். வாகனம் வெடித்து 30 அடி உயரம் வரை செல்கிறது. இதையெல்லாம் ரஜினிகாந்த், அமிதாப், ஷாருக்கானோ சல்மான் கானோ செய்ய முடியாது. நாங்கள் செய்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால், பாலையா செய்தால் ஏற்றுக் கொள்வார்கள். அவர் அன்பான உள்ளம் கொண்டவர். அவர் திரையுலகிலும் அரசியலிலும் மென்மேலும் பணியாற்ற இறைவனை வேண்டுகிறேன்" என்றார்.