
நிவர் புயலால் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில், மழை வெள்ளமாக தேங்கிநிற்கிறது, கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ஹைதராபாத் செல்வதற்காக, சென்னை விமானம் நிலையத்திற்கு காரில் வந்துள்ளார். ஆனால் கடும் மழையின் காரணமாக அவரது கார், போக்குவரத்துக்கு நெரிசலில் சிக்கிக்கொண்டுவிட்டது.
இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ், மெட்ரோ ரயிலில் பயணம் செய்து, விமானநிலையத்தை அடைந்துள்ளார். மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் படத்தையும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.