Skip to main content

பின்னாடி ஜெயலலிதா ஃபோட்டோ, 'டயரை நக்கி...' என்று வசனம்... இந்தப் படம் என்ன பிரச்சனையை கிளப்பப்போகுதோ? 

Published on 26/11/2018 | Edited on 26/11/2018

பாபி சிம்ஹா, ரம்யா நம்பீசன், எம்.எஸ்.பாஸ்கர், இன்னும் பலரது நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் 'அக்னிதேவ்'. ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் 'ரோஜா' புகழ் மதுபாலா ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். ஜெபிஆர், ஷாம் சூர்யா இருவரும் இணைந்து இயக்கியுள்ள இந்தப் படம் பிரபல நாவல் எழுத்தாளர் இராஜேஷ்குமாரின் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் வசனங்களை பிரபல திரைப்பட விமர்சகரும், திரைக்கதை ஆலோசகருமான 'கருந்தேள்' ராஜேஷ் எழுதியுள்ளார். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரைலர் யூ-ட்யூப் ட்ரெண்டில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. பெரிய நட்சத்திரங்கள் யாருமில்லாத இந்தப் படத்தின் ட்ரைலர் இந்த வரவேற்பைப் பெற முக்கிய காரணம் என்ன தெரியுமா? மதுபாலா நடித்துள்ள பாத்திரமும், அந்தப் பாத்திரம் பேசும் வசனங்களும்தான்.

 

agnidev madhubala‘சகுந்தலா தேவி’ என பெயரிடப்பட்டுள்ள அந்தப் பாத்திரம் ஒரு கர்வமும் ஆணவமும் கொண்ட பெண் அரசியல்வாதியாக உருவாக்கப்பட்டுள்ளது. 'உன்னை மாதிரி ஆம்பளைங்க எத்தனை பேரை காலுக்குக் கீழ போட்டு நசுக்கி இந்த இடத்துக்கு வந்துருக்கேன் தெரியுமா' என்று கடுமையான குரலில் பேசுகிறார் மதுபாலா. 'சின்ன சின்ன ஆசை, சிறகடிக்கும் ஆசை' என்று ஆடிய மதுபாலாவா இது என்னும் அளவுக்கு டெரராக இருக்கிறார் மதுபாலா. 'அரசியல்ல கனவுல வர்ற எதிரியைக் கூட நெஜத்துல இல்லாம பண்ணிடுவேன்' என்று வேறு மிரட்டுகிறார்.

இதற்கெல்லாம் மேலாக, 'என் வீல் சேர் டயரை நக்கிட்டு கெடக்குறதா இருந்தா கெடங்க' என்று ஒரு வசனம் இருக்கிறது. 'டயரை நக்கி' என்ற வார்த்தைகள் இணையத்தில் பிரபலம். 'குனிஞ்சு குனிஞ்சு கும்பிடு போட்டா அப்படியே நம்பிடுவேன்னு நெனச்சியா?' என்ற வசனம் அதிமுகவில் ஜெயலலிதாவுக்குக் குனிந்து கும்பிடு போட்ட கட்சிக்காரர்களை குறிப்பிடுவதாக இணையத்தில் கமெண்டுகள் குவிந்துள்ளன. அந்தக் காட்சியில் மதுபாலாவின் பின்னணியில் ஜெயலலிதாவின் இளமைக் கால ஃபோட்டோ இருப்பது இன்னும் அதிக ஆர்வத்தையும் சந்தேகத்தையும் உண்டாக்குவதாக இருக்கிறது. அந்த ஜெயலலிதா புகைப்படம் அவர் அரசியலுக்கு வந்த புதிதில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

madhubala agnidevஏற்கனவே 'சர்கார்' திரைப்படத்தில் 'கோமளவள்ளி' என்ற பெயர் ஜெயலலிதாவை குறிப்பதாக இருப்பதாகவும் வேறு சில காட்சிகள் அதிமுகவினரையும் அரசையும் இழிவுபடுத்துவதாகவும் கூறி, கடும் எதிர்ப்பைக் காட்டி திரையரங்குகள் முன் இருந்த விஜய் பேனர்களை சூறையாடினர் அதிமுகவினர். பின்னர், சில காட்சிகள் நீக்கப்பட்ட பின்பே எதிர்ப்புகள் அடங்கின. இப்போது, 'அக்னிதேவ்' படத்தில் இடம் பெற்றிருக்கும் காட்சிகள் எப்படி புரிந்துகொள்ளப்படும், என்ன விளைவுகள் வரும் என்று ட்ரைலரைப் பார்த்த ரசிகர்கள் கேள்வியுடன் இருக்கிறார்கள். திரைப்படங்களை, கற்பனை படைப்புகளாகப் பார்த்து விட்டுவிடாமல் அதில் வரும் காட் படக்குழுவினர் இதைப் பற்றி கவலைப்படாமல் ட்ரைலர் ட்ரெண்டான மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.        

 

                         

சார்ந்த செய்திகள்

Next Story

'சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே அதிமுக இணையும்'-ஓபிஎஸ் நம்பிக்கை

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
'AIADMK will merge before assembly elections' - OPS hopes

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன், சசிகலா எனப் பல தரப்புகளும் பிரிந்து கிடக்கும் நிலையில் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பும், அதேபோல் சசிகலா தரப்பும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.

அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியாக இரண்டாவது முறையாக 'அம்மா வழியில் மக்கள் பயணம்' என்ற பெயரில் மீண்டும் சுற்றுப் பயணத்தை நேற்று சசிகலா தொடங்கியுள்ளார். தென்காசி அடுத்த காசிமேசபுரத்தில் இருந்து சசிகலா தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கி பொதுமக்களிடம் திறந்த வெளி வாகனத்தில் பேசி இருந்தார்.

'AIADMK will merge before assembly elections' - OPS hopes

சசிகலாவின் சுற்றுப்பயணத்தை முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், 'கறந்த பால் மடி புகாது; மீன் கருவாடு ஆகலாம். ஆனால் கருவாடு மீன் ஆகாது. இப்போது இருக்கின்ற நிலைமை 'கறந்த பால் மடி புகாது; கருவாடு மீன் ஆகாது என்ற நிலைமை தான் உள்ளது. இந்த மாதம் அனைத்திந்திய அதிமுகவின் தொண்டர்கள் மிகவும் கவனமாகவும், விழிப்புணர்வுடன் எச்சரிக்கையோடும் இருக்க வேண்டிய தருணம் இது'' என தெரிவித்திருந்தார்.

nn

இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே அதிமுக கட்சி இணைவது உறுதி ஆகிவிடும் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''கட்சியை இணைப்பதற்கான அடிப்படை வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் அதிமுக ஒன்றிணையும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே அதிமுக ஒன்றிணைந்து விடும்'' என தெரிவித்துள்ளார்.

Next Story

சர்ச்சைகளில் சிக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் குடும்பம்; பூஜாவின் தாயார் அதிரடி கைது!

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
IAS officer's family embroiled in controversies and Pooja's mother arrested

மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டத்தில் பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த பூஜா கேட்கர், உதவி ஆட்சியராக சேருவதற்கு முன்பு தனக்கென தனி அலுவலகம், கார் மற்றும் வீடு வேண்டும் என்று உயர் அதிகாரிகளிடம் நச்சரித்து வந்ததாகக்  கூறப்பட்டது. மேலும்,  புனே கூடுதல் ஆட்சியர் அஜய் மோரே வெளியே சென்றபோது, அவரது அறைக்கு வெளியே இருந்த கூடுதல் ஆட்சியரின் பெயர் பலகையை தூக்கிவிட்டு, பூஜா கேட்கர் தனது பெயர் பலகையை மாற்றி அந்த அறையை ஆக்கிரமித்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது. மேலும், அவர் ஒப்பந்தக்காரர் ஒருவர் கொடுத்த விலை உயர்ந்த சொகுசு காரில் விதியை மீறி சைரன் வைத்துக் கொண்டதாகவும் புகார்கள் எழுந்தன. மேலும், ஓய்வு பெற்ற மகாராஷ்டிரா அரசு அதிகாரியான பூஜாவின் தந்தை திலீப் கேத்கர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், பூஜா கேட்கர் பொருளாதாரத்தில் பின்தங்கிய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பர் சேர்ந்தவர் எனக் கூறியும், பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி எனப் போலி சான்றிதழ் வழங்கி ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆனதாக சர்ச்சை எழுந்தது. பூஜா கேட்கர் மீதான புகார் தொடர்பாக விசாரிக்க மத்திய அரசு, தனி நபர் ஆணையம் அமைத்து உத்தரவிட்டது. 

இதனையடுத்து, பூஜா கேட்கரின் பயிற்சியை நிறுத்தி வைத்து மகாராஷ்டிரா மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையே, சாலையோர நடைபாதையை பூஜாவின் குடும்பத்தினர் ஆக்கிரமித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, புனே நகராட்சி சார்பில் அனுப்பிய நோட்டீஸூக்கு பூஜாவின் குடும்பத்தினர் தரப்பில் விளக்கம் அளிக்கப்படாததால் புல்டோசர் மீது பூஜாவின் ஆக்கிரமிப்பு தடுப்புச்சுவர் நேற்று இடிக்கப்பட்டது. 

இந்த நிலையில், பூஜாவின் தாயார் மனோரமா கேட்கரை போலீசார் கைது செய்துள்ளனர். நில விவகாரம் தொடர்பாக, புனே மாவட்டம் தத்வாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரை, மனோரமா கேட்கர் துப்பாக்கியை காட்டி மிரட்டிய வீடியோ அண்மையில் வெளியாகி வைரலானது.  இதனையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், சட்டவிரோத துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் புனே போலீசார், பூஜாவின் தாயார் மனோரமா கேட்கரை கைது செய்துள்ளனர்.