publive-image

Advertisment

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான ரகுல் பிரீத் சிங், தமிழில் தீரன், என்.ஜி.கே. உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போதுநடிகர் கமல்ஹாசனுடன் 'இந்தியன் 2' திரைப்படத்தில் நடித்து வருகிறார். எனினும், அவரது நடிப்பில் வெளியான படங்கள்அடுத்தடுத்து தோல்வி அடைந்து வருவதால்திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகை ரகுல் பிரீத் சிங் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "ஒரு நடிகையாக நான் நடிப்புப் பசியில் இருக்கிறேன். எனக்கு இருக்கும் நடிப்புப் பசி கொஞ்சமும் குறையவில்லை. இந்த வருடம் இதுவரை எனது நடிப்பில் ஐந்து படங்கள் திரைக்கு வந்துள்ளன. இப்போது எனது முழுகவனமும் அடுத்த ஆண்டு எத்தனை படங்களில் நடிக்க வேண்டும், என்ன மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதில் தான் இருக்கிறது. திருமணம் செய்யப் போகிறேன் என்ற தகவலில் உண்மை இல்லை'' என்றார்