Skip to main content

‘என்னுடைய முதல் டேட் காபி டேவில்தான்’- பிரபல நடிகை பகிர்ந்த நினைவுகள்

Published on 01/08/2019 | Edited on 01/08/2019

கர்நாடக முன்னாள் முதல்வரான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், காபி டே நிறுவனத்தின் உரிமையாளருமான சித்தார்த் 30ஆம் தேதி திடீரென மாயமான நிலையில் நேற்று காலை அவரது உடல் நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது.
 

pranita

 

தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் மனமுடைந்த அவர் நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காபி டே நிறுவனத்தின் தற்காலிக தலைவராக எஸ்.வி.ரங்கநாத் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த நிறுவனத்தில் இயக்குனராக பணியாற்றி வந்த இவர், தற்போது தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக நிதின் பக்மானே நியமிக்கப்பட்டுள்ளார்.  காபி டே நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டம் வரும் 8-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

இந்நிலையில் பல பிரபலங்கள் சிசிடி மெமரீஸ் என்று காபி டேவில் தங்களுக்கு நடைபெற்ற மறக்கமுடியாத நினைவுகளை ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர். நடிகை ப்ரனிதா சுபாஷ், “பெங்களூருவில் வளர்ந்தபோது, சில சிசிடிகள் நினைவிலிருந்து எடுக்க முடியாத அளவிற்கு மனதிற்கு நெறுக்கமானவை. குறிப்பாக பள்ளி உயர்கல்வி படிக்கும்போது 14 வயதில் என்னுடைய முதல் டேட்டிற்காக 50 ரூபாய் செலவு செய்து கேப்பச்சினோ வாங்கினேன். அப்போது எனக்கு கொடுக்கப்படும் பாக்கெட் மணியில் லிமிட்டாக வாங்க கூடிய ஒன்றாக இருந்தது. இப்பொழுதும் நான் எங்கையவது ரோட் ஜார்னி செய்தால் சிறிது பிரேக் எடுத்துக்கொள்ள வழியில் ஏதாவது ஒரு சிசிடி இருக்க வேண்டும் என்று பிரே செய்துகொள்வேன்”என்று பதிவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எப்படி இறந்தார் சித்தார்த்தா..? வெளியானது உடற்கூறாய்வு அறிக்கை...

Published on 27/08/2019 | Edited on 27/08/2019

காபி டே நிறுவன உரிமையாளரும், கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் வி.ஜி. சித்தார்த்தா (60) கடந்த மாதம் 29-ம் தேதி மங்களூரு அருகேயுள்ள நேத்ராவதி ஆற்றின் அருகே திடீரென மாயமானார்.

 

cafe coffeday founder case

 

 

36 மணி நேர தீவிர தேடலுக்கு பிறகு அவரது உடல் நேத்ராவதி ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. பின்னர் மங்களூரு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது உடல் சிக்மங்களூருவில் உள்ள அவரது காபி எஸ்டேட்டில் தகனம் செய்யப்பட்டது. அவரது இறப்பை குறித்து பல்வேறு ஊகங்கள் எழுந்துவந்து நிலையில், தற்போது அவரின் உடற்கூறாய்வு முடிவு அறிக்கை வெளியாகியுள்ளது.

அதன்படி சித்தார்த்தா ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள மங்களூரு மாநகர காவல் ஆணையர் ஹர்ஷா கூறும் போது, “பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி வி.ஜி.சித்தார்த்தா ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் சட்டப்பூர்வமாக வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டும் வரை, தொடர் விசாரணைகள் நடைபெறும்" என தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

"காஃபி டே சித்தார்த்தா" தற்கொலையை வைத்து காங்கிரசுக்கு செக் வைக்கும் பாஜக!

Published on 19/08/2019 | Edited on 19/08/2019

காஃபி டே உரிமையாளர் சித்தார்த் தற்கொலை செய்துக்கிட்ட பிறகும், அவர் நிறுவனம் தொடர் தலைவலியை சந்திச்சிக்கிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. கர்நாடகாவை சேர்ந்த காஃபி டே உரிமையாளர் சித்தார்த், தற்கொலை செய்துகொள்வதற்கு முன், வருமான வரித்துறையின் கெடுபிடியால் தான் இந்த விபரீத முடிவை எடுப்பதாகக் கடிதம் எழுதி வச்சிருந்தார். உண்மையில், அவருடைய தொழிலை வச்சி எந்தக் கெடுபிடியையும் வருமான வரித்துறை காட்டலை. அதேசமயம், கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் உட்பட வெளிமாநில அரசியல்வாதிகள் பலரும், தங்கள் கறுப்புப் பணத்தை சித்தார்த்திடம் கொடுத்து வைக்க, அதை எல்லாம் சித்தார்த் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தாராம். 
 

cafe coffee day



இதை மோப்பம் பிடித்த வருமான வரித்துறையினர், யார் யாரின் பணம் உங்களிடம் இருக்குதுன்னு கேட்டு நெருக்கடி கொடுத்திருக்காங்க.'' இதனையடுத்து யாரையும் காட்டிக்கொடுக்க முடியாத நிலையில்தான் சித்தார்த் இப்படியொரு மோசமான முடிவைத் தேடிக்கிட்டாருன்னு சொல்றாங்க. இப்போது காஃபி டே மீண்டும் இயங்கத் தொடங்கினாலும், சித்தார்த்திடம் பணம் கொடுத்த அரசியல் புள்ளிகள் ஒருபுறமும், வருமான வரித்துறையினர் இன்னொரு புறமும் நெருக்கடி தருகிறார்களாம். மேலும் ரெய்டு அபாயத்திலும் சிக்கிக் கொண்டிருக்கிறதாம் காஃபி டே. சித்தார்த் தற்கொலையை வச்சு காங்கிரசுக்கு குறி வைக்கும் வேலையையும் பா.ஜ.க. அரசு கச்சிதமா காய் நகர்த்தி வருவதாக சொல்லப்படுகிறது.