Skip to main content

அந்த விளம்பரத்தில் நடிக்க மறுத்த நடிகை... குவியும் பாராட்டுக்கள்...

Published on 28/11/2020 | Edited on 28/11/2020

 

lavanya tripathi

 

 

சசிகுமார் நடிப்பில் வெளியான பிரம்மன் படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லாவண்யா திரிபாதி. இவர் தமிழ் சினிமாவில் இதுவரை இரண்டு படங்களில்தான் நடித்திருக்கிறார். ஆனால், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

 

இவர் தற்கொலைக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் இவருக்கு மதுபான நிறுவனம் ஒன்றிடமிருந்து விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. அதற்காக பெரிய தொகை சம்பளம் தருவதாகத் தெரிவித்துள்ளது அந்த மதுபான நிறுவனம். ஆனால் அதை லாவண்யா ஏற்கவில்லை. இந்த விளம்பரத்தில் நடிக்க விருப்பமில்லை என்று கூறிவிட்டார். மதுபான விளம்பரங்களில் நடித்து அதை சமுதாயத்திற்கு ஊக்குவிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

 

லாவண்யாவின் இந்த செயலால் சமூக வலைதளத்தில் பலரும் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். சந்தீப் கிஷனுடன் இணைந்து ஏ1 எக்ஸ்பிரஸ் என்னும் படத்தில் நடித்திருக்கிறார். கரோனா அச்சுறுத்தலால் இப்படம் வெளியாகவில்லை. விரைவில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரபல நடிகை தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக அவதூறு பரப்பிய இளைஞர் கைது! 

Published on 27/07/2020 | Edited on 27/07/2020
lavanya

 

 

தமிழில் ‘பிரம்மன்’, ‘மாயவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் லாவண்யா திரிபாதி. தற்போது அதர்வாவுடன் இணைந்து தலைப்பிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார். இவர் தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார். 

 

கடந்த மார்ச் மாதம் யூ-ட்யூப் சேனல் நடத்தி வரும் ஸ்ரீராமோஜு சுனிஷித் என்பவர் நடிகை லாவண்யா திரிபாதி தன்னை திருமணம் செய்துகொண்டு ஏமாற்றியதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். தெலுங்கு திரையுலகில் சர்ச்சையான இந்த வீடியோ வைரலானது.

 

இதனைத் தொடர்ந்து ஸ்ரீராமோஜு தன்னை பற்றி அவதூறு செய்திகளை பரப்பி வருவதாக நடிகை லாவண்யா திரிபாதி ஹைதரபாத் சைபர் க்ரைம் போலீஸில் புகார் செய்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் ஹைதரபாத் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனையறிந்த ஸ்ரீராமோஜு தலைமறைவானார்.

 

இந்நிலையில், அவதூறு பரப்பிய ஸ்ரீராமோஜு சுனிஷித்தை போலீஸார் 26ஆம் தேதி கைது செய்துள்ளனர். போலீஸார் நடத்திய விசாரணையில் தனது யூ-ட்யூப் சேனலுக்கு அதிக சப்ஸ்கிரைபர்களை ஈர்க்கவே லாவண்யா திரிபாதி மீது அவதூறு பரப்பியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

 

முன்னதாக இதேபோல நடிகை தமன்னா மீதும் அவதூறு பரப்பியதாகவும், அவர் கண்டுகொள்ளதாததால் லாவண்யா பெயரை பயன்படுத்தியதாகவும் ஸ்ரீராமோஜு போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

காவல் ஆணையரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த ஐ.டி. ஊழியர் லாவண்யா!

Published on 11/05/2018 | Edited on 11/05/2018
lavanya3


வழிப்பறி கொள்ளையர்களால் தாக்கப்பட்டு உயிர் பிழைத்த ஐ.டி. ஊழியர் லாவண்யா காவல் ஆணையரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

சென்னை பள்ளிக்கரணை காவல் நிலைய எல்லையில் கடந்த 12.02.2018 அன்று இரவு நடந்த வழிப்பறி சம்பவத்தின்போது, கொள்ளையர்கள் தாக்கியதில் ஐ.டி. ஊழியர் லாவண்யா  படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது மருத்துவமனையில் கமிஷ்னர் விஷ்வநாதன் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த மென்பொறியாளர் லாவண்யா இன்று (11.05.2018) காலை காவல் ஆணையரகத்திற்கு வருகை தந்து, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் விஸ்வநாதனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, கூடுதல் ஆணையர்கள் எஸ்.என்.சேஷசாயி, எச்.எம்.ஜெயராம், எம்.சி.சாரங்கன், காவல் இணை ஆணையர்கள் டி.எஸ்.அன்பு, சி.மகேஸ்வரி, துணை ஆணையர் எம்.எஸ்.முத்துசாமி, நுண்ணறிவுப்பிவு துணை ஆணையர்கள் ஆர்.திருநாவுக்கரசு, எஸ்.விமலா மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லாவண்யா, என்னுடைய வாழ்க்கையில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றதில்லை. அதில் இருந்து மீண்டு வந்ததற்கு என்னுடைய மன உறுதிதான் காரணம் என்று எல்லோரும் கூறுகின்றனர். ஆனால், என்னுடைய மன உறுதி ஒரு சதவீதம் தான் காரணம். காவல் துறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் எனக்கு அளித்த ஆதரவு தான் நான் மீண்டு வந்ததற்கு காரணம்.

சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த இரண்டு ஆய்வாளர்கள் என்னை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். எனக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்தனர். எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து தமிழக மக்களுக்கும் நன்றி என்றார்.