Skip to main content

நடிகை வனிதா திருமண விவகாரம்: லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் ட்வீட்!

Published on 29/06/2020 | Edited on 29/06/2020

 

lakshmi ramakrishnan

 

நடிகை வனிதாவிற்கும் பீட்டர் பால் என்பவருக்கும் கடந்த 27ஆம் தேதி நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் திருமணம் நடைபெற்றது.

 

பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவி தன்னை விவகாரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்துள்ளதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள வனிதா, அவர் தங்களிடம் இருந்து பணம் பெறவே இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளதாகவும், இதனைச் சட்டப்படி எதிர்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகையும் இயக்குனருமான லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் கூறுகையில், “தற்போதுதான் இந்தச் செய்தியைப் பார்த்தேன். அவருக்கு ஏற்கனவே கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இன்னும் விவாகரத்து ஆகவில்லை. எப்படிப் படிப்பும், புகழ் வெளிச்சமும் உள்ளவர் இப்படியான ஒரு தவறை செய்ய முடியும்? அதிர்ச்சியடைந்தேன். வனிதா மற்றும் பீட்டர் பாலின் திருமணம் முடியும் வரை அவருடைய முதல் மனைவி ஏன் காத்திருந்தார். ஏன் திருமணத்தை நிறுத்தவில்லை?”  என்று குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நடிகை வனிதா மீது கொலைவெறி தாக்குதல்; மீண்டும் கோரிக்கை வைத்த வனிதா

Published on 26/11/2023 | Edited on 26/11/2023

 

nn

 

பிரபல நடிகை வனிதாவை மர்ம நபர் கொடூரமாக தாக்கிய சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

பிக்பாஸ் 7 விமர்சனம் குறித்த படப்பிடிப்பை முடித்துவிட்டு பிரபல நடிகை வனிதா காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். காரில் இருந்து இறங்கி சகோதரி சௌமியா வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது  'ரெட்கார்டா  கொடுக்குறீங்க... இதற்கு நீ வேற சப்போர்ட் வேற பண்றியா'' எனக்கேட்டு மர்ம நபர் ஒருவர் அவருடைய முகத்தில் கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இருட்டான அந்த இடத்தில் எங்கிருந்தோ ஒருவர் வந்து தன்னை தாக்கிவிட்டு தப்பி ஓடியதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் தன்னுடைய காயமடைந்த முகத்துடன் பதிவு ஒன்றை வனிதா வெளியிட்டுள்ளார். நடிகை வனிதா கொடூரமாக தாக்கப்பட்டது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் தமக்கு உடனடியாக உதவி செய்த காவல்துறைக்கு நன்றி தெரிவிப்பதாகவும், உடல்நலம் பெறும் வரை தம்மை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் வனிதா எக்ஸ் வலைதளத்தில் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார்.

 

 

 

Next Story

"பேப்பரில் மட்டும் இருக்க கூடாது" - மகளிர் இட ஒதுக்கீடு குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன்

Published on 23/09/2023 | Edited on 23/09/2023

 

lakshmy ramakrishnan about women reservation

 

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கடந்த 18 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை  நடைபெற்றது. இந்த கூட்டத் தொடரின் இரண்டாவது நாள் முதல், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடந்த நிலையில், முதல் மசோதாவாக, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

 

இதையடுத்து நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் புதிய நாடாளுமன்றத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டனர். அதில் கங்கனா ரணாவத், தமன்னா, மெஹ்ரீன் பிர்ஸாடா உள்ளிட்ட சில நடிகைகள் அழைப்பை ஏற்று புதிய நாடாளுமன்றத்தை பார்வையிட்டனர். மேலும் மகளீர் இட ஒதுக்கீடு மசோதாவை வரவேற்றனர். 

 

இந்த நிலையில் நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன், இந்த மசோதா குறித்து அவரது கருத்தை பகிர்ந்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது, "ரொம்ப நல்ல விஷயம். அதெல்லாம் ஓகே. அது வெறும் பேப்பரில் இருந்தால் மட்டும் போதாது. அதாவது புலி, சிங்கம், கரடி எல்லாத்தையும் பேப்பரில் வரைஞ்சு வச்சிவிட்டு எங்க வீட்டில் இவையெல்லாம் இருக்கு என சொல்வதில் பிரயோஜனம் இல்லை. அது செயலில் இருக்க வேண்டும். ஒரு சில மாவட்டங்களில் பெண்கள்தான் அதிகாரத்துக்கு வரவேண்டும் என ஒதுக்கீடு இருந்தது. ஆனால் அந்த மாவட்டத்தில் இருக்கிற ஆண்களோட மனைவிகள், சகோதரிகள் என நிறுத்தப்படுவார்கள். அவர்களுக்கு பின்னால் இருந்து செயல்படுபவர்கள் ஆண்கள் தான். அந்த மாதிரி இல்லாமல் நிஜமாகவே பெண்கள் அதிகாரத்துக்கு வரவேண்டும். 

 

முடிவெடுக்க வேண்டிய இடத்துக்கு பெண்கள் வந்தால்தான் பெண்களோட பிரச்சனையை அவர்களின் கோணத்தில் இருந்து பார்க்க முடியும். ஒரு சில சமயங்களில் ஆண்களுக்கு இருக்கிற உணர்வு கூட பெண்களுக்கு இருப்பதில்லை. எனக்கு தெரிந்து, கடந்த வருஷத்தில் 16வயசு குழந்தை 7 மாதம் கர்ப்பமாக இருக்கும் போது, ஒரு அதிகாரி அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கூட்டிட்டு போகும் போது 6 கிலோ மீட்டர் உச்சி வெயிலில் நடக்க வச்சு 4 மாடி ஏற வச்சிருக்காங்க. அந்த அதிகாரி ஒரு பெண். ஒரு வேலை ஒரு ஆண் அதிகாரியாக இருந்தால் அந்த பெண்ணை ஆட்டோவில் கூட்டி போயிருப்பார். அதனால் இது வந்து ஒரு ஆண், பெண் என்பது இல்லை. நம்முடைய மன எண்ணம் அப்படி இருக்கிறது. எனவே இந்த 33 சதவீதம் வருவது நல்ல விஷயம். ஆனால் அது சரியாக செயலில் இருக்குமா என்பதை இனிமே தான் பார்க்க வேண்டும்" என்றார்.