actress chithra case update

சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 2020-ஆம் ஆண்டு ஒரு தனியார் ஹோட்டலில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். பின்பு சித்ராவின் தந்தை, தனது மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த காவல் துறையினர், சித்ராவின் கணவர் ஹேம்நாத் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisment

இதில் கைது செய்யப்பட்ட ஹேம்நாத், ஒரு வருடம் கழித்து ஜாமீனில் வெளியே வந்தார். பின்பு இந்த வழக்கு தொடர்பாக ஒரு பேட்டியில் பேசிய அவர், ஒரு அரசியல் தலைவரால் எனது உயிருக்கு ஆபத்து எனப் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தார். இதையடுத்து சித்ரா தற்கொலை வழக்கு பல கட்டங்களாகத் திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.

Advertisment

இந்த நிலையில் சித்ரா மரண வழக்கில் இன்று தீர்ப்பு வந்துள்ளது. ஹேம்நாத் உள்ளிட்ட கைதான 7 பேரும் சித்ராவை கொலை செய்ததற்கான எந்த ஒரு ஆதாரமோ, சாட்சியோ, இல்லை எனக் கூறி அவர்கள் ௭ பேரையும் விடுதலை செய்வதாக நீதிபதி ரேவதி உத்தரவிட்டுள்ளார்.