actress akanksha mohan passed away

Advertisment

நடிகைகள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம், திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் வாய்தா படநடிகை தீபிகா தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு தமிழ் பட நடிகை தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இளம் நடிகையும், மாடல் அழகியுமான அகன்ஷா மோகன் மும்பையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தியில் ஒரு சில படங்களில் நடித்துள்ள அகன்ஷா மோகன் தமிழில் 9 திருடர்கள் படத்தில் நடித்துள்ளார். கடந்த வாரம் இந்தியில் வெளியான சியா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கடந்த புதன்கிழமை மும்பையில் உள்ள வெர்சோவா பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடிகை அகன்ஷா மோகன் இரண்டு நாட்களுக்கு அறை எடுத்துதங்கியுள்ளார். ஆனால் இரண்டு நாட்களாகியும்அகன்ஷா மோகன் தங்கியிருந்த அறை திறக்கப்படாததால், சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் போலீஸுக்குதகவல் கொடுத்துள்ளனர்.அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் கதவை உடைத்து விட்டு உள்ளே சென்று பார்த்த போது, நடிகை அகன்ஷா மோகன் ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதுதெரியவந்தது.

Advertisment

இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார், தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். அதில் நடிகை அகன்ஷா மோகன் தற்கொலை செய்து கொள்வதற்குமுன்பு எழுதிய கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில், “என்னை மன்னித்துவிடுங்கள். எனது இறப்புக்கு யாரும் காரணமில்லை, நான் மகிழ்ச்சியாக இல்லை. எனக்கு அமைதி மட்டுமேதேவை”என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே நடிகை அகன்ஷா மோகன் கடந்த சில நாட்களாக மன அழுத்ததில் இருந்ததாகவும், அதன் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும்கூறப்படுகிறது.