Skip to main content

“என் ரசிகர்களுக்கு...” - நடிகர் யஷ் நெகிழ்ச்சி!

 

kgf 2

 

'ஒரு கன்னட படம் டப் ஆகி வருகிறது' என்ற குறைந்தபட்ச எதிர்பார்ப்புடன் வெளியாகி, இந்தியாவையே கவனிக்க வைத்த திரைப்படம் ‘கே.ஜி.எஃப்’. கதாநாயகனுக்கான பில்ட்-அப் காட்சிகளிலும் வசனங்களிலும் புதிய உயரத்தைக் காட்டிய இந்தப் படத்தில் நாயகன் 'ராக்கி'யாக யஷ் நடித்திருந்தார். நாயகனுக்குத் தரப்பட்டது வெறும் பில்ட்-அப்பாக இல்லாமல் படமும் அந்த அளவுக்கு சிறப்பாக 'மாஸ்'ஸாக இருந்தது. உருவாக்கம் மிக பிரம்மாண்டமாகவும் அந்த காலகட்டத்தையும் சூழலையும் கண்முன் கொண்டு வந்திருந்தது. டப் செய்யப்பட்ட அத்தனை மொழிகளிலும் இந்தப் படத்தின் வசனங்கள் மீம் மெட்டீரியலாகின. தாய்ப்பாசம் என்றாலே சமீபமாக இந்தப் படத்தின் இசைதான் ஒலிக்கிறது. படம் வெளிவந்தபோது கிடைத்த புகழைவிட தொலைக்காட்சிகளிலும் OTTயிலும் வெளியாகி அதிகமாகப் பார்க்கப்பட்டு பாராட்டப்பட்டது இந்தப் படம்.

 

இப்படியிருக்க, ‘கே.ஜி.எஃப் - சேப்டர் 2’ வுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. சஞ்சய் தத் முக்கிய வில்லனாக நடிப்பது கூடுதல் சிறப்பு. ஜனவரி 8 அன்று படத்தின் டீசர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படத்தின் டீஸர் முன்னரே லீக்கானதால் அதிர்ச்சியடைந்த படக்குழு அறிவித்ததற்கு முன்பாகவே அதிகாரப்பூர்வமாக டீசரை வெளியிட்டது.

 

திடீரென எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் வெளியான ‘கே.ஜி.எஃப் 2’ டீஸரை, வெளியான முதல் 24 மணி நேரத்திலேயே 100 மில்லியனுக்கும் மேலான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். அதேபோல வெளியான முதல் 13 மணிநேரத்தில் 3 மில்லியன் மேல் லைக்ஸ் பெற்று சாதனையைப் படைத்துள்ளது.

 

இதனால் ‘கே.ஜி.எஃப்’ படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறது. இதுகுறித்து நடிகர் யஷ் ட்விட்டரில் பதிவிடுகையில், "என்னுடைய ரசிகர்களுக்கு... நீங்கள் எப்போதும் எனக்கு உறுதுணையாக நின்று, அதீத அன்பை வழங்கினீர்கள். உண்மையில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ந்து உங்களை மகிழ்விப்பேன்” என்று தெரிவித்துள்ளார். 

 

மிஸ் பண்ணிடாதீங்க