/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/soori_1.jpg)
இயக்குநர்வெற்றிமாறன் 'அசுரன்' படத்தின் வெற்றியைத்தொடர்ந்து நடிகர் சூரியை வைத்து 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். படத்தில்பவானி ஸ்ரீ கதாநாயகியாக நடித்து வருகிறார். விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் படத்தில்முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' சிறு கதையைத்தழுவி எடுக்கப்படுகிறது. இளையராஜாஇசையமைக்கும் இப்படத்தை எல்ரெட். குமார் தயாரிக்கிறார்.
இப்படத்தை தொடர்ந்து சூரி நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது அதன்படி, இயக்குநர் அமீர் இயக்கும் புதிய படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அமீர் இயக்கத்தில்வெளியான 'மௌனம் பேசியதே', 'ராம்', 'பருத்திவீரன்', ஆதிபகவன் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. நீண்ட வருடங்களுக்கு பிறகு இயக்கத்தில் அமீர் களமிறங்கியுள்ளதால்சூரி நடிக்கும் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)