Skip to main content

“மிகவும் வெட்காம இருக்கிறது”- ஈ.பி.எஸை கடுமையாக விமர்சித்த சித்தார்த்...

Published on 10/12/2019 | Edited on 10/12/2019

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையிலான குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.
 

sdiharth

 

 

மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், எதிர்கட்சியினரும் இந்த மசோதாவுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த புதிய மசோதாவின்படி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்கள் ஐந்து ஆண்டுகள் வசித்திருந்தாலே இந்திய குடியுரிமை வழங்கப்படும். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் இந்தியாவில் மிகப்பெரிய குழப்பம் ஏற்படும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரமும், இஸ்லாமியர்களை மட்டும் புறக்கணிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவருவதை ஏற்க முடியாது என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாவும் ஏற்கனவே தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில் நடிகர் சித்தார்த் ட்விட்டரில் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், “எனது மாநிலத்தை எடப்பாடி பழனிச்சாமி பிரதிநிதித்துவப்படுத்துவதை கண்டு மிகவும் வெட்கப்படுகிறேன்.  குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்ததின் மூலம்  எடப்பாடி பழனிச்சாமியின் உண்மையான நிறத்தையும், அவரது நேர்மையையும், அதிகார பலத்திற்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுப்பவர் என்பது தெரிகிறது. இவை அனைத்திற்கும் உங்களுடைய அரசு பொறுப்பு, அதுவரையில் தற்காலிக அதிகாரத்தை அனுபவையுங்கள். 

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை ஜெயலலிதா இருந்திருந்தால் கண்டிப்பாக ஆதரித்திருக்க மாட்டார். ஜெயலலிதா இல்லாத நேரத்தில் அதிமுகவின் கொள்கையை எப்படி மாற்றியது” என்று பதிவிட்டுள்ளார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அஜித் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன்” - எடப்பாடி பழனிசாமி

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Edappadi K Palaniswami about ajithkumar hospitalised

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. அப்போது கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் காலமானார். இதையடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும்படி அஜித் அறிவுறுத்தினார். அதன்படி அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இப்படத்தின், திரையரங்குகளுக்கு பின் ஓடிடியில் வெளியாகும் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் அஜர்பைஜானில் நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக அறிவிப்பு வெளியானது. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், வருகிற 15ஆம் தேதி விடாமுயற்சியின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழலில் அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இன்னும் சில தினங்களில் வீடு திரும்பவுள்ளதாகவும் கூறப்பட்டது. 

இதையடுத்து தற்போது 'திட்டமிட்டபடி அடுத்த வாரம் அஜர்பைஜானில் நடைபெறும் விடாமுயற்சி படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமார் பங்கேற்பார். காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அஜித் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று இரவே வீக்கத்திற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு மூளையில் கட்டி என வெளியான தகவலில் உண்மையில்லை. சிகிச்சை முடிந்து தற்போது ஓய்வில் உள்ளார். இன்று இரவு அல்லது நாளை அஜித் வீடு திரும்புவார்' என சுரேஷ் சந்திரா விளக்கமளித்துள்ளார்.

இந்த சூழலில் அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சகோதரர் நடிகர் அஜித்குமார் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன” என அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Next Story

இ.பி.எஸ் பிறந்தநாள்; தலைமை அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம் (படங்கள்)

Published on 12/05/2023 | Edited on 12/05/2023

 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பின் பல்வேறு சட்டப் போராட்டங்கள் நடத்தி அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகியுள்ள எடப்பாடி பழனிசாமி இன்று தனது 69வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை அதிமுகவினர் பல்வேறு இடங்களில் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். 

 

அந்த வகையில் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதில் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.