Skip to main content

'கொரோனா குமார்' படத்தில் கதாநாயகனாக நடிக்கும் முன்னணி நடிகர்?

 

corona

 

'ரௌத்திரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் கோகுல். அப்படத்தைத் தொடர்ந்து அவர் இயக்கிய 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. அதன்பிறகு, அவர் இயக்கிய ‘காஷ்மோரோ’, ‘ஜூங்கா’ ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

 

இந்த நிலையில், கோகுல் அடுத்து இயக்கவுள்ள படம் 'கொரோனா குமார்'. இப்படம் குறித்தான அறிவிப்பு கடந்த ஆண்டு ஜூன் மாதமே வெளியான நிலையில், படத்தின் முதற்கட்ட வேலைகளில் படக்குழு கவனம் செலுத்தி வருகிறது. முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகவுள்ள இப்படத்தில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் கோகுல் தெரிவித்த கதை நடிகர் சந்தானத்திற்குப் பிடித்துப் போக, அவர் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டதாகக் கூறுகின்றனர் நமக்கு நெருங்கிய சினிமா வட்டாரங்கள். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மிஸ் பண்ணிடாதீங்க