Skip to main content

"சக்தி இல்லை என்றால் செயல் இல்லை" - நடிகர் ராஜ்கிரண்

Published on 26/01/2023 | Edited on 26/01/2023

 

actor rajkiran talks about pen sakthi at uzhavan awards 

 

சென்னையில் நடிகர் கார்த்தி நடத்தும் உழவன் பவுண்டேசன் ஒருங்கிணைத்த உழவர் விருது 2023 வழங்கும் விழாவில் பல்வேறு திரைப்பிரபலங்கள், அரசியல் ஆளுமைகள் கலந்து கொண்டார்கள். பல்வேறு நபர்களைப் பாராட்டி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் நடிகர் ராஜ்கிரண் பேசியதாவது..

 

"திரைத்துறையில் இருக்கும் கலைஞர்களுக்கு சமூகப்பொறுப்பு மிக மிக அவசியம். அதனை நடிகர் சிவகுமார் உணர்ந்ததால்தான் அவர்களின் மூத்த புதல்வன் சூர்யா அகரம் அறக்கட்டளை சார்பாக கல்வி வளர்ச்சி பணியில் ஈடுபட்டுள்ளனர். இளைய மகன் கார்த்தி உழவன் அறக்கட்டளை சார்பாக உழவர்களை கவுரவித்து வருகிறார்கள். இது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம். கார்த்தியின் இந்த பணி சாதாரண விஷயமில்லை.

 

மகாத்மா காந்தியடிகள் நம் இந்தியத் தேசத்தின் ஆன்மா கிராமத்தில் தான் இருக்கிறது என்றார். அவர் இவ்வாறு குறிப்பிட்டது விவசாயத்தைத் தான். ஏனெனில் நம் இந்திய தேசம் விவசாய பொருளாதாரத்தைத் தான் அடிப்படையாகக் கொண்டது. விவசாயிகள் தன்னிறைவு பெற்று பொருளாதார விருத்தி அடையும் போது தான் நாடும் மேம்பட முடியும். அதற்கான சிறு சிறு முயற்சியில் பலரும் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்னும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

 

நடிகர் கார்த்தி இந்த விழாவிற்கு அழைத்தபோது  ஒரு பெண்கள் குழு தங்களின் உழைப்பாலும் மேன்மையாலும் நிறைய சாதித்துக்காட்டி உள்ளார்கள் என்றார். அதனைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தேன். ஆதியில் நம் முன்னோர்கள் காட்டைத் திருத்தி கழனியாக்கினார்கள்  காட்டை கழனியாக்கியது ஆண்களாக இருந்தாலும், அந்த கழனியில் உழவூட்டியது பெண்கள் . இது தான் வரலாறு . இது தான் சக்தி. சக்தி இல்லை என்றால் செயல் இல்லை. அப்படி இந்த சக்தியான பெண்கள் நினைத்தால் தான் வீடும் உருப்படும், நாடும் உருப்படும்." என்று பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விருது வென்ற  'ஐயோ சாமி...’ பாடல் 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
ayyo sami gets edison award

அண்மையில் நடைபெற்ற 16வது எடிசன் திரைப்பட விருது விழாவில்  கவிஞர் பொத்துவில் அஸ்மினின்
 'ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்' சிறந்த உணர்ச்சி பூர்வமான பாடல் (Best Sensational Song -2023) விருதினைப் பெற்றுள்ளது. 'நான்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'தப்பெல்லாம் தப்பே இல்லை' பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் இப்பாடலை எழுதியுள்ளார். 

பாடலை பிரபல இலங்கை இசையமைப்பாளர் சனுக்க இசையமைக்க இலங்கையை சேர்ந்த பிரபல பாடகி விண்டி பாடியுள்ளார். இலங்கையில் அதிக பார்வைகளை ஈர்த்த முதல் இலங்கை தமிழ் பாடல் என்ற பெருமையை இப்பாடல் பெற்றுள்ளது. இவ்விருதினை பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின், இசையமைப்பாளர் சனுக்க, பாடகி விண்டி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இயக்குநர் மனோஜ் பாரதிராஜா, சென்னைக்கான ஆஸ்திரேலியா கவுன்சிலர் டேவிட் ஆகியோர் விருதை வழங்கினர்.
 

Next Story

பூஜையுடன் பணிகளைத் தொடங்கிய சங்க நிர்வாகிகள்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nadigar sangam building works start again with pooja

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறைவு பெறாமல் இருந்தது. இந்த பணி நிறைவு பெற வங்கியில் ரூ.40 கோடி கடன் வாங்க ஒப்புதல் வாங்கியிருப்பதாக சங்க பொருளாளர் கார்த்தி 67வது சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து நடிகர் சங்க புதிய கட்டடம் முழுமையாக கட்டி முடிக்க அமைச்சர் உதயநிதி நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். பின்பு சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினர் கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கினார். தொடர்ந்து விஜய் ரூ.1 கோடி நன்கொடை அளித்ததாக நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது. 

nadigar sangam building works start again with pooja

இந்த நிலையில் இன்று சங்கத்தின் புதிய கட்டட பணிகள் மீண்டும் தொடங்கியது. பூஜை நடத்தி பணிகளை தொடங்கினார்கள் சங்க நிர்வாகிகள். இந்த பூஜை விழாவில், சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்ட சில முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.