/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/thennarasu.jpg)
சிவகார்த்திகேயன் ஹீரோவாக முதன் முதலில் அறிமுகமான படம் மெரினா. இந்த படத்தில் நடித்த துணை நடிகர் தென்னரசு என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குடும்பத்தகராறு காரணமாக தென்னரசு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. சென்னை மயிலாப்பூர் நொச்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெண் ஒருவருடன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தென்னரசு காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு வயது குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் தென்னரசு அடிக்கடி குடிபோதையில் மனைவியிடம், தகராறு செய்து வந்துள்ளார். தொடர்ந்து கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் முற்ற இன்று வீட்டில் உள்ள சீலிங் பேனில் புடவையை கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் தென்னரசு.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)