/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/shiva_0.jpg)
இயக்குநர்சுசீந்திரன் தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கிராமத்து இளைஞர்களின் வாழ்வையும், விளையாட்டையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து ஜீவா, மாவீரன் கிட்டு, ஈஸ்வரன் உள்ளிட்ட வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார்.
இந்தநிலையில் நடிகர் ஜெய் நடிக்கும் சிவ சிவா படத்தை இயக்குநர் சுசீந்திரன் இயக்கி வருகிறார். இதில் ஜெய்க்கு ஜோடியாக மீனாக்ஷி கோவிந்தராஜன் நடிக்கிறார். காளி வெங்கட், பாலா சரவணன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். லென்டி ஸ்டூடியோநிறுவனம் இப்படத்தைத்தயாரித்துள்ளது. நடிகர் ஜெய் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்.
சமீபத்தில் 'சிவ சிவா' படத்தின் டீசரும், முதல் பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் படத்தின் இரண்டாவது பாடலான'அம்மம்மா' பாடல் தற்போது வெளியாகியுள்ளது. கவிஞர் யுகபாரதி வரிகளில்ஹரிஹரன் மற்றும் அர்ச்சனா இப்பாடலைப் பாடியுள்ளனர். தற்போது இந்த பாடல் இணையத்தில் ரசிகர்களால் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)