actor harish kalyan announced his marriage

தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஹரிஷ் கல்யாண். கடைசியாகத் தெலுங்கில் வெற்றி பெற்ற 'பெல்லி சூப்புலு' படத்தின் தமிழ் ரீமேக்கான 'ஓ மணப்பெண்ணே' படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து 'நூறு கோடி வானவில்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனையடுத்து 'டீசல்' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது.

Advertisment

இந்நிலையில் பிசியாக படங்களில் நடித்து ஹரிஷ் கல்யாண் தனது திருமணம் குறித்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "இப்போது, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், எனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு முக்கியமான பயணத்தின் தொடக்கத்தை துவங்க உள்ள மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எழுதுகிறேன். உங்கள் அனைவரின் ஆசியுடன், நர்மதா உதயகுமார் உடனான எனது திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையொட்டி ரசிகர்கள் ஹரிஷ் கல்யாணுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதோடு தனது வருங்கால மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

Advertisment