/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_439.jpg)
பாலிவுட் சினிமாவில் வேகமாக வளர்ந்து வந்த தோனி படநாயகன் சுஷாந்த் சிங் ராஜ்புத்,கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் பாலிவுட் வட்டாரத்தையே பரபரப்பாக்கியது. இதன் பின்னணியில் போதைபொருள் மாஃபியாக்களுக்கும் சில பாலிவுட் நடிகர்களுக்கும் தொடர்புள்ளதாக விசாரணைகளும் நடந்துவருகின்றது. மேலும் அவரது ரசிகர்களும் பெரும் துயரத்தில் ஆழ்ந்தனர்.
சுஷாந்த் சிங், தன் வாழ்நாளில் செய்ய வேண்டிய கனவுகள் என்று 50 விஷயங்களை ஒரு லிஸ்ட்டாக வெளியிட்டிருந்தார். அதில், தான் படித்த டெல்லி கல்லூரி விடுதியில் மாலை தங்க வேண்டும். நூறு குழந்தைகளை நாசா ஆய்வகத்திற்கும், இஸ்ரோ ஆய்வகத்திற்கும் அனுப்ப வேண்டும் உள்ளிட்ட பல கனவு அசைகளை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார்.
அதில், அவரது 11வது ஆசையாக 1,000 மரங்களை நட வேண்டும் என்பது இருந்தது. இந்த ஆசையை நிறைவேற்றும் வகையில் பாலிவுட் இயக்குனர் அபிஷேக் கபூர் மற்றும் அவரது மனைவியான படத் தாயாரிப்பாளர் பிரக்கியா இருவரும் சுஷாந்த் சிங் பிறந்தாளான நேற்று (21.01.2021) ஆயிரம் மரகன்றுகளை நடும் நிகழ்வினை தொடங்கியுள்ளனர். இந்நிகழ்வில் பேசிய பிரக்கியா, “சுஷாந்த் சிங், சாதிக்க வேண்டும் என பல கனவுகளைக் கொண்டிருந்தார். அவை அனைத்தையும் நம்மால் செய்ய முடியாது. ஆனால், 1,000 மரங்களை நட வேண்டும் எனும் அவரின் இந்த ஆசையை நம்மால் நிறைவேற்ற முடியும். அவர் பிறந்தநாளை இப்படி அவரின் கனவை நிறைவேற்றி கொண்டாடுவதே சரியான முறையாக இருக்கும் என நாங்கள் நினைக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)