aamir khan to join rajini coolie

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் கூலி. சன்பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Advertisment

இதையடுத்து இப்படத்திலிருந்து தொடர்ந்து கதாபாத்திர அறிமுக போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது. அதன்படி மலையாள நடிகர் சௌபின் சாஹிர், தயாள் என்ற கதாபாத்திரத்திலும் தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா, சைமன் என்ற கதாபாத்திரத்திலும் கன்னட நடிகர் உபேந்திரா கலீஷா என்ற கதாபாத்திரத்திலும் சத்யராஜ் ராஜசேகர் என்ற கதாபாத்திரத்திலும் ஸ்ருதிஹாசன் பிரீத்தி என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருவதாக அறிவித்திருந்தனர்.

Advertisment

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நாளை(16.10.2024) முதல் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இப்படத்தில் பாலிவுட் முன்னணி நடிகர் அமீர்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவல் உறுதியாகும் பட்சத்தில் முதல் முறையாக நேரடி தமிழ் படத்தில் அமீர்கான் நடிக்கவுள்ளார். மேலும் ரஜினியுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கவுள்ளார். முன்னதாகவே இவர் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது நினைவுகூரத்தக்கது.

சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் படத்தில் பாலிவுட் முன்னணி நடிகர் அமிதாப் பச்சன் நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment