Skip to main content

ஜப்பானை தொடர்ந்து சீன ரசிகர்களுக்கும் விருந்து படைக்கும் ரஜினிகாந்த் 

Published on 05/12/2018 | Edited on 05/12/2018
2point0

 

 

 

ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் சமீபத்தில் வெளியான '2.0' படம் 4 நாட்களில் படம் ரூ.400 கோடியை வசூலித்ததாக தகவல் வெளியானது. ரசிகர்களும் படத்தை தொடர்ந்து கொண்டாடி வரும் நிலையில் '2.0' படம் அடுத்த ஆண்டு மே மாதம் சீனாவில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இப்படத்தின் சீன வெளியீட்டு உரிமையை எச்.ஒய் மீடியோ கைப்பற்றியுள்ளது. சீன மொழில் டப்பிங் செய்யப்பட்டுள்ள இப்படம் 10,000 திரையரங்குகளில், 57,000 திரைகளில் வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதிலும் 47,000 3டி திரைகளில் இப்படம் வெளியாகவுள்ளது. மேலும் இதன்மூலம் 3டியில் அதிக திரைகளில் வெளியாகும் வெளிநாட்டு படங்களின் பட்டியலில் '2.0' படமும் இடம்பிடித்துள்ளது.

 

 

 

2point0

 

 

சார்ந்த செய்திகள்