Skip to main content

இந்தியாவிலேயே 10,000 திரையரங்குகளில் வெளியாகும் முதல் படம் 2.0

Published on 22/11/2018 | Edited on 22/11/2018
2.0

 

ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள '2.0' படம் வரும் நவம்பர் 29ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நேரடியாகவும், மேலும் பல மொழிகளில் டப்பிங்கிலும் உலகமெங்கம் மிக பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. மேலும் இந்த படம் முதல்முறையாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 10 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடப்படவுள்ளது. இதற்கு முன்பு வேறு எந்த தமிழ் படமும் இவ்வளவு திரையரங்குகளில் வெளியானது இல்லை என்ற வரலாற்று சாதனையை '2.0' படம் படைக்கவுள்ளது.

 

 


 

ஏற்கனவே ரஜினியின் தளபதி படம் வெளிநாடுகளில் முதல் தடவையாக 100 திரையரங்குகளில் வெளியானது. மேலும் இதே ஷங்கர் இயக்கத்தில் நடித்திருந்த சிவாஜி படம் 1000 தியேட்டர்களில் வெளியானது சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்தியாவிலேயே ரூ.600 கோடி செலவில் தயாரான ஒரே படமாக உருவாகியுள்ள இப்படம் ஹாலிவுட் படங்களை போல் ஐமேக்ஸ் தியேட்டர்களிலும் திரையிட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் முதன் முறையாக 4டி ஒலி தொழில்நுட்பத்தில் இப்படத்தின் ஒலி அமைப்பை உருவாக்கி உள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்