சென்னையில் 20வது சர்வதேச திரைப்பட விழா வருகிற 15-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை மொத்தம் 8 நாட்கள் நடைபெற உள்ளது. தமிழக அரசுடன் இணைந்து இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் (Indo Cine Appreciation Foundation) இந்த விழாவை நடத்துகிறது. இந்த விழாவில் 51 நாடுகளின் மொத்தம் 102 படங்கள் திரையிடப்படுகிறது. 12 தமிழ் படங்கள் போட்டிப் பிரிவுக்கு திரையிடத் தேர்வாகியுள்ளன. அவை ஆதார், பிகினிங், பபூன், கார்கி, கோட், இறுதிபக்கம், இரவின் நிழல், கசடதபற, மாமனிதன், நட்சத்திரம் நகர்கிறது, ஓ 2, யுத்த காண்டம்.
மேலும் ‘இந்தியன் பனோராமா’ பிரிவின் கீழ் 15 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. அவை, அப்பன் (மலையாளம்), போட்போடி (பெங்காலி), சினிமா பண்டி (தெலுங்கு), தபாரி குருவி (இருளர்), எக்தா காய் ஜலா (மராத்தி), ஹடினெலெண்டு (கன்னடம்), கடைசி விவசாயி (தமிழ்), மாலை நேர மல்லிப்பூ (தமிழ்), மஹாநந்தா (பெங்காலி), போத்தனூர் தபால் நிலையம் (தமிழ்), பிரதிக்சயா (ஒரியா), சௌதி வெல்லக்கா (மலையாளம்), தயா (சமஸ்கிருதம்), தி ஸ்டோரி டெல்லர் (இந்தி).