2023 miss world competion held in india

1951 ஆம் ஆண்டு முதல் உலக அழகி (MISS WORLD) போட்டி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கடைசியாக 1996 ஆம் ஆண்டு பெங்களூருவில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து இந்தாண்டுக்கான உலக அழகி போட்டி 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதனை உலக அழகி போட்டி அமைப்பின் தலைவர் ஜூலியா மோர்லி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Advertisment

மேலும் அவர் பேசுகையில், "2023 ஆம் ஆண்டுக்கான 71வது உலக அழகிப்போட்டிவருகிற நவம்பரில் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இப்போட்டி 30 நாட்கள் நடைபெறவுள்ள நிலையில் 130 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்துகொள்கின்றனர்" என்றார்.

Advertisment

இதைத்தொடர்ந்து இந்தியா சார்பில் இந்தப் போட்டியில் பங்கேற்கும் மிஸ் இந்தியா வேர்ல்ட் சினி ஷெட்டி, “உலகின் பல்வேறு நாடுகளில்இருந்து வரும் சகோதரிகளை சந்திப்பதற்கு உற்சாகத்துடன் காத்திருக்கிறேன். இந்தியாவின் பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டுவேன்" என்றார்.

கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடந்த உலக அழகி போட்டியில் போலந்து நாட்டைச் சேர்ந்த கரோலினா பைலாவ்ஸ்கா உலக அழகிபட்டம் வென்றார். இதுவரை நடந்த உலக அழகி போட்டிகளில்6 இந்தியர்கள் வென்றுள்ளார்கள். கடைசியாக 2017 ஆம்ஆண்டில் மானுஷி சில்லார் இப்பட்டத்தை தட்டிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.