Skip to main content

200 கோடி பண மோசடி வழக்கு; சுகேஷ் சந்திரசேகருக்கு டிஜிபி உதவி; நீதிமன்றம் அதிரடி

Published on 09/02/2023 | Edited on 09/02/2023

200 crore money laundering case tihar jail delhi DGP helped Sukesh Chandrasekhar;

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலரை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார். அதில் ஒன்றாக, தொழிலதிபரை மிரட்டி 200 கோடி ரூபாய் மோசடி செய்துள்ள வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது டெல்லி சிறையில் உள்ளார். மேலும் சுகேஷ் சந்திரசேகரின் மனைவி லீனா மரியா பால் உள்ளிட்ட 6 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. 

இந்த வழக்கில் நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸ் மற்றும் நோரா ஃபதேஹி ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி இருவர் மீதும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து பல முறை விசாரணை நடத்தியது. சிறையில் இருக்கும்  சுகேஷ் சந்திரசேகர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகத் தகவல் வெளியான நிலையில் டெல்லி திகார் ஜெயிலில் டிஜிபி-யாக பணிபுரிந்த சந்தீப் கோயல், சுகேஷ் சந்திரசேகருக்கு உதவியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். 

இந்த நிலையில் சுகேஷ் சந்திரசேகரிடம் லஞ்சம் வாங்கி சொத்து சேர்த்த புகாரில் டெல்லி சிறைத்துறை அதிகாரிகள் 3 பேரை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய 3 அதிகாரிகளையும் 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

மிரட்டுவதாகப் புகார் - திடீரென வாபஸ் வாங்கிய பிரபல நடிகை

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
Jacqueline Fernandez withdraws plea against Sukesh Chandrashekhar's letters

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலரை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார். அதில் ஒன்றாக, தொழிலதிபரை மிரட்டி 200 கோடி ரூபாய் மோசடி செய்துள்ள வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது டெல்லி சிறையில் உள்ளார். மேலும் சுகேஷ் சந்திரசேகரின் மனைவி லீனா மரியா பால் உள்ளிட்ட 6 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. 

இந்த வழக்கில் நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸ் மற்றும் நோரா ஃபதேஹி ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி இருவர் மீதும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து பல முறை விசாரணை நடத்தியது. சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து ஜாக்குலின் 7 கோடி ரூபாய்க்கு மேல் குற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இதையடுத்து சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸுக்கு கடந்த ஆண்டு ஈஸ்டரை முன்னிட்டு ஒரு காதல் கடிதம் எழுதியிருந்தார். இதைத் தொடர்ந்து பலமுறை கடிதம் எழுதி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் இந்த கடிதங்களை நிறுத்தக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் புகார் மனுத் தாக்கல் செய்தார். அதில் சுகேஷ் சந்திரசேகர், சிறையிலிருந்து கொண்டே மிரட்டி வருவதாகவும் அவர் எழுதும் கடிதங்கள் என் தனிப்பட்ட உரிமைகளைப் பாதிப்பதாகவும் குறிப்பிட்டு, அவர் மீது வழக்குப் பதிவு செய்ய கோரிக்கை வைத்திருந்தார். மேலும் டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா சுகேஷ் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை ஜாக்குலின் ஃபெர்னான்டஸ் வாபஸ் பெற்றுள்ளார்.

Next Story

"லவ் யூ பேபி, காதல் மட்டுமல்ல..." - நடிகை ஜாக்குலினுக்கு சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் கடிதம்

Published on 10/04/2023 | Edited on 10/04/2023

Sukesh Chandrasekhar letter to Jacqueline Fernandez

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலரை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார். அதில் ஒன்றாக, தொழிலதிபரை மிரட்டி 200 கோடி ரூபாய் மோசடி செய்துள்ள வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது டெல்லி சிறையில் உள்ளார். மேலும் சுகேஷ் சந்திரசேகரின் மனைவி லீனா மரியா பால் உள்ளிட்ட 6 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. 

இந்த வழக்கில் நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸ் மற்றும் நோரா ஃபதேஹி ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி இருவர் மீதும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து பல முறை விசாரணை நடத்தியது. சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து ஜாக்குலின் 7 கோடி ரூபாய்க்கு மேல் குற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸுக்கு கடந்த ஈஸ்டரை முன்னிட்டு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை சுகேஷ் சந்திராவின் வழக்கறிஞர் சமூக வலைத்தளங்களில் ஆனந்த் மாலிக் வெளியிட்டுள்ளார். அந்த கடிதத்தில், "என் முயல் குட்டி... அடுத்த ஈஸ்டர், இதுவரை நீ வாழ்க்கையில் கொண்டாடாத அளவுக்குச் சிறப்பாக இருக்கும். 

நான் உன்னைப் பற்றி நினைக்காத நேரமே கிடையாது. உன்னுடைய மிகவும் அழகான இதயத்தில் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியும். அது உனக்கும் அப்படித்தான் என்று எனக்குத் தெரியும். நீ நடித்த சமீபத்திய விளம்பரத்தை பார்த்தேன் பேபி. அது நமக்கான விளம்பரம். லவ் யூ மை பேபி, காதல் மட்டுமல்ல, வெறித்தனமான லவ்" என குறிப்பிடப்பட்டுள்ளது.