Skip to main content

எதிர்காலத்துக்கு திரும்பும் விக்ரம்

Published on 17/02/2023 | Edited on 17/02/2023

 

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தங்கலான்'. கோலார் தங்க வயலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கர்நாடகாவின் கோலார் பகுதியில் மாறி மாறி நடந்து வருகிறது. வருகிற மார்ச் மாதம் முழு படப்பிடிப்பும் முடிய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் விக்ரமின் லுக் பலரது கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது மேலும் சில புகைப்படங்களை விக்ரம் பகிர்ந்துள்ளார். இதனை வெளியிட்டு "எதிர்காலத்துக்கு திரும்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்