sac

நடிகர்விஜய்யின்தந்தையும்இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர், விஜயின்பெயரில் கட்சியைபதிவு செய்யுமாறு, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விண்ணப்பித்திருந்தார். இது, விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்கிறார் என பரபரப்பை கிளப்பிய நிலையில், தனக்கும் தன் தந்தையின் இயக்கத்திற்கும், எந்த தொடர்பும் இல்லையென்றும், தனது ரசிகர்கள் யாரும் அந்த இயக்கத்தில் சேர வேண்டாம் எனவும்விஜய்அறிக்கை வெளியிட்டார்.

Advertisment

இதனைதொடர்ந்து, எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கிய கட்சியின்பொருளாளராகநியமிக்கப்பட்டிருந்த விஜயின்தயார் ஷோபா, அஸோஸியேஷன் ஆரம்பிப்பதாக கூறி தன்னிடம் கையெழுத்து வாங்கிவிட்டதாகவும், பொருளாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும் அறிவித்தார். ஷோபாவை தொடர்ந்து, எஸ்.ஏ. சந்திரசேகரின் கட்சிதலைவராகநியமிக்கப்பட்டிட்டிருந்த பத்மநாபனும், தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

Advertisment

இந்தநிலையில் எஸ்.ஏ. சந்திரசேகர், தனதுகட்சியைபதிவு செய்யவேண்டாமென, தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.