Skip to main content

அசத்தல் போஸ்டர்களுடன் ரிலீஸ் தேதியை அறிவித்த பொன்னியின் செல்வன் படக்குழு

Published on 02/03/2022 | Edited on 02/03/2022

 

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'பொன்னியின் செல்வன்'. எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் எடுக்கப்படுகிறது. இரு பாகங்களாக உருவாகும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. பல்வேறு தடங்கல்களுக்குப் பிறகு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்த நிலையில், அடுத்தகட்ட பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. 

 

இந்நிலையில் லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரனின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தில் நடித்துள்ள கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அத்துடன் படம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த போஸ்டர்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜெயம் ரவியின் ‘பிரதர்’ படம்; அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
jayam ravi brother movie update release

சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன் போன்ற வெற்றி படங்கள் கொடுத்த இயக்குநர் ராஜேஷ்.எம், தொடர் தோல்வி படங்கள் கொடுத்து வந்தார். தற்போது அவர், ஜெயம் ரவியை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். ஸ்கிரீன் சீன் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்.எம் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியங்க மோகன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பிரதர் (Brother)’. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்தில், பூமிகா, விடிவி கணேஷ், நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இப்படத்தின் அறிவிப்பு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியானது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளிவர இருக்கும் இப்படத்தின் பாடலை ‘திங் மியூசிக்’ ஆடியோ உரிமையை வாங்கியிருப்பதாக சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோவை படக்குழு வெளியிட்டது. அதில், திருமண வரவேற்பில் ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் இருவரும் சேர்ந்து பாடலை பாடி கொண்டாடி வருவது போல் இடம்பெற்றியிருந்தது. சில நொடிகளில் மட்டுமே வரும் அந்தப் பாடலில் ஹம்மிங் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று முனுமுனுக்க செய்தது.

இந்த நிலையில், படக்குழு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் இப்படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை ‘ஜீ தமிழ்’ நிறுவனம் வாங்கியிருப்பதாக ஒரு முன்னோட்ட வீடியோவை வெளியிட்டுள்ளது. இதில் வரும் காட்சிகள் மூலம், இயக்குநர் ராஜேஷ்.எம் மீண்டும் கம் பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

‘சாவுக்கு துணிந்தவனுக்கு மட்டும் தான் இங்க வாழ்க்கை’ - தங்கலான் டிரெய்லர் வெளியீடு!

Published on 10/07/2024 | Edited on 10/07/2024
Thangalaan trailer release!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் நடிப்பில், இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

கோலார் தங்க வயலை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ள நிலையில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் ஒவ்வொரு மாதமும் தள்ளி போய், இன்னும் ரிலீஸ் தேதி அறிவித்தப்பாடில்லை. 

இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அதில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகம் தங்கம் எடுப்பதற்காக அடிமைப்படுத்தப்படுகிறார்கள் போல் தெரிகிறது. அதன் மூலம் வரும் பிரச்சனை தான் இப்படத்தின் கதை என்று யூகிக்க முடிகிறது. இந்த டிரெய்லரில் அதிகமாக வசனம் இடம்பெறவில்லை என்றாலும், ‘சாவுக்கு துணிந்தவனுக்கு மட்டும் தான் இங்க வாழ்க்கை’ சில வசனம் பெரும் கவனத்தை பெறுகிறது. 

மேலும், டிரெய்லர் ஆரம்ப காட்சியிலேயே நம்மை அந்த உலகத்திற்கு ஒளிப்பதிவின் மூலம் கொண்டு செல்கிறது. இப்படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் ஏ.கிஷோர் குமார், ரிலீஸுக்கு பிறகு பேசப்படுவார் என்று கூறலாம். அதே போல், இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமாரின் இசை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது வழக்கம் போல், விக்ரம் தனக்கே உரித்தான சிறந்த நடிப்பில் நம்மை கவர்கிறார். இப்படத்தின் டிரெய்லரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.