Skip to main content

கண்மணி Vs கதீஜா - ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

Published on 25/04/2022 | Edited on 25/04/2022

 

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா மற்றும் நயன்தாரா நடித்துள்ளனர். இப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பணிகள் முடிந்துள்ள நிலையில் படக்குழு வெளியீட்டுப் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.  இப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் நிலையில் தற்போது படத்தின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நயன்தாரா பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
nayanthara instagram story issue

தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, தமிழில் சசிகாந்த் இயக்கும் 'டெஸ்ட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது யூடியூப்பர் டியூடு விக்கி இயக்கும் மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார். மேலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இது மட்டுமல்லாமல் விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதனை இயக்கும் எல்.ஐ.சி படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. 

இதனிடையே விக்னேஷ் சிவனை காதலித்து 2022ஆம் ஆண்டு ஜூனில் திருமணம் செய்து கொண்டார். பின்பு வாடகை தாய் மூலம் உயிர், உலக் என்ற இரட்டை ஆண் குழந்தைகளை பெற்று கொண்டார். இதையடுத்து அழகு சாதன பொருட்கள் விற்கும் '9 ஸ்கின்' (9 Skin) என்ற நிறுவனத்தை தொடங்கினார். இதன் மூலம் தொழில்முனைவோராக  களம் இறங்கினார். இதனைத் தொடர்ந்து, ஃபெமி 9 (Femi 9) என்ற சானிட்டரி நாப்கின் பொருளை அறிமுகப்படுத்தினார். 

இதனிடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கினார். அதில் தனது படங்களின் ப்ரொமோஷன், தனது குழந்தைகளின் புகைப்படங்கள், தனது தொழில் நிறுவனத்தின் விளம்பரம் என ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில் கணவர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை அன்ஃபாலோ செய்ததாக சர்சையானது. இதனால் அவரது திருமண உறவு குறித்து பல்வேறு சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது. 

இதையடுத்து திருமண உறவு குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த நிலையில் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்க ஸ்டோரியில் ‘நான் இழந்துவிட்டேன்’ (I'm lost) என குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பலரும் பல்வேறு விதமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Next Story

“என்னை ஐபிஎஸ் அதிகாரியாக்க ஆசைப்பட்டாங்க” - விக்னேஷ் சிவன்

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
vignesh shivan speech in awarness short film released

போக்குவரத்து விழிப்புணர்வு குறும்படங்கள் வெளியீட்டு விழா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர், இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் அவரது தாயார் மீனாகுமாரி ஆகியோர் உள்ளிட்ட சில அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

ad

இந்த விழாவில் சென்னை எல்லைக்கு உட்பட்ட சாலைகளில், விபத்துக்களை குறைக்கவும், பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்தை உறுதி செய்யவும், ஒரு வழிப்பாதை, புதிய வேக வரம்புகள் போன்ற பல்வேறு முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இரு விழிப்புணர்வு குறும்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிகளை மதிக்காமல் வாகன ஓட்டிகள் தவறான வழிகளிலிருந்து வாகனத்தை இயக்குவது குறித்தும், ஹெல்மட் அணியாமல் பயணிக்கும் வாகன ஓட்டிகள் குறித்தும் சிக்னல்களில் எல்லைக்கோட்டை மதிக்க வாகன ஓட்டிகளுக்கு வலியுறுத்தும் வகையிலும் ‘நீங்க ரோடு ராஜாவா?’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஷாந்தனு, யோகி பாபு, அர்ச்சனா, பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனைத்து குறும்படங்களையும் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். 

விழாவில் விக்னேஷ் சிவன் பேசுகையில், “காவல் துறை முன்வந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோக்களை, எனக்கு இயக்க எப்போதுமே 100 சதவீதம் ஆர்வம் இருக்கும். அது போன்ற முன்னெடுப்பு எப்போதுமே நேர்மையாக இருக்கும். இந்த குறுப்படங்கள் மக்களுக்கு ஈஸியாக புரியுர மாதிரி எளிய முறையில் எடுத்துள்ளோம். வெளிநாடுகளில் விதிமுறைகளை சரியாக பின்பற்றுவார்கள். ஆனால் நம்ம ஊரில் கொஞ்சம் மெத்தனமாகவே பின்பற்றுவார்கள். எல்லாருக்குமே தனிப்பட்ட முறையில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அது சரியாகும். நானும் போலீஸ் குடும்பத்தில் இருந்து வந்தவன் தான். என்னையுமே ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக ஆக்க வேண்டும் என்று தான் ஆசைப்பட்டாங்க. ஆனால் நான் திரைப்பட இயக்குநர் ஆகிவிட்டேன். அப்படி ஆனாலும் கூட காவல்துறை சம்மந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபடுகிற போது ரொம்ப பெருமையாக சந்தோஷமாகவும் இருக்கும்” என்றார்.