Published on 06/08/2019 | Edited on 06/08/2019




தெலுங்கில் திரையுலகில் எதிர்ப்பார்ப்பில் உள்ள படங்களின் வரிசையில் முக்கியமானது மன்மதுடு 2. தெலுங்கின் உச்ச நட்சத்திரம் நாகர்ஜுனா நடிப்பில் ராகுல் இயக்கியிருக்கும் இந்தப்படத்தில் நாகர்ஜுனாவிற்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ், சமந்தா ஆகியோர் கௌரவ தோற்றத்தில் நடிப்பதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன.
படத்தின் ட்ரைலர், சிங்கில் ட்ராக் என அடுத்தடுத்து வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் ஹீரோயின் ரகுல் ப்ரீத்சிங்கின் பிரத்தியேக புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.