Published on 12/09/2019 | Edited on 12/09/2019















மலையாள நடிகையான மஞ்சிமா மோகன், கௌதம் மேனன் இயக்கிய “அச்சம் என்பது மடமையடா” படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்ததின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானார். அதன்பின், இப்படை வெல்லும், சத்ரியன், தேவராட்டம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது துக்ளக் தர்பார், களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட படங்களிலும், விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்கும் எஃப்.ஐ.ஆர் படத்திலும் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மஞ்சிமா மோகன் தற்போது புடவை உள்ளிட்ட விதவிதமான ஆடைகளில் எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டுவருகிறார்.