Skip to main content

சொத்திற்காக பாம்பை வைத்து மனைவியைக் கொன்ற கணவன் - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 24

Published on 09/10/2023 | Edited on 09/10/2023

 

thilagavathi-ips-rtd-thadayam-24

 

பாம்புகளின் மூலம் மனைவியைக் கொன்ற கணவன் குறித்த வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விவரிக்கிறார்

 

தன் மனைவியைக் கொள்வதற்காக பாம்பு பிடிப்பவரிடம் பாம்பைப் பெற்றிருக்கிறான் சூரஜ். இந்த வழக்கிற்காக போலீசார் பாம்புகள் குறித்து தீவிர ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். அதில் பாம்புகள் அந்தப் பெண்ணை இயற்கையாகக் கொத்தவில்லை என்பது தெரிந்தது. ஒருகட்டத்தில் உண்மைகள் அனைத்தையும் அவன் ஒப்புக்கொண்டான். பாம்பையும் அவன் அடித்துக் கொன்று புதைத்தது தெரிந்தது. பேங்க் லாக்கரில் இருந்த பெரும்பாலான நகைகளை அவன் எடுத்துவிட்டான் என்பது தெரிந்தது. 

 

தன்னுடைய தாய் வீட்டில் அனைத்து நகைகளையும் அவன் மறைத்து வைத்திருந்தான். பாம்பை ஆக்ரோஷமாக மாற்றுவதற்காக பாம்பை அவன் பட்டினி போட்டிருக்கிறான். அந்த மரணத்தை இயற்கையான ஒன்றாக மாற்ற அவன் விரும்பினான். அதன் மூலம் குழந்தையைத் தன்னிடம் வைத்துக்கொண்டு சொத்துக்களை அபகரிக்க அவன் நினைத்தான். ஆனால் போலீஸ் விசாரணையில் அத்தனை உண்மைகளும் தெரிந்தன. அவனுக்கு நீதிமன்றத்தில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. உத்ராவைக் கொடுமைப்படுத்தியதற்காகவும், தடயங்களை மறைத்ததற்காகவும், சதித்திட்டத்திற்கு உடந்தையாக இருந்ததற்காகவும், அவனுடைய குடும்பத்தினருக்கும் தண்டனை வழங்கப்பட்டது.

 

இந்த நிலையில் இருந்த ஒரு பெண்ணை, ஏன் திருமணம் செய்துகொடுக்க வேண்டும் என்று அவளுடைய பெற்றோர் நினைத்தனர் என்று தெரியவில்லை. நம்முடைய சமுதாயத்தில் பொதுவாகவே வயதுக்கு வந்த ஒரு பெண்ணை நிச்சயம் திருமணம் செய்துகொடுத்தாக வேண்டும் என்கிற அழுத்தம் இருக்கிறது. இந்த வழக்கில் சூரஜுக்கு 5 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. குழந்தையும் உத்ரா குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.