Skip to main content

எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே முதல்வரானவர் கதை!  - முதல்வரைத் தெரியுமா? #10  

Published on 18/12/2018 | Edited on 23/12/2018

இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் தேர்தல் முடிந்து முதல்வர்கள் பதவியேற்றிருக்கிறார்கள். ஜனநாயகத்தின் பெரும் திருவிழா நடந்து முடிந்திருக்கிறது. அடுத்த ஆண்டு வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இது முன்னோட்டம் என்று கூறப்படுகிறது. அந்தந்த மாநிலங்களின் அரசியல் சூழ்நிலை மட்டுமே என்றும் சிலர் கூறுகின்றனர். மோடியின் போட்டியாளர் தான் தான் என்று நிறுவியிருக்கிறார் ராகுல். இப்படி அதிமுக்கியத்துவம் வாய்ந்த தேர்தலில் வென்று முதல்வராகியிருப்பவர்களை தெரியுமா? தெரிந்துகொள்ள வேண்டாமா? கடந்த பகுதியில் நாம் அப்போதைய ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவின் கதையைப் படித்தோம். அப்பொழுதே அடுத்த தேர்தலில் பாஜகவின் வாய்ப்புகள் குறைவு என்பதை பேசியிருந்தோம். அது நிகழ்ந்திருக்கிறது.  ஆனால், மக்களைப் போலவே நாமும் சச்சின் பைலட் முதல்வராவார் என்று எதிர்பார்த்தோம். இங்கோ அசோக் கெலாட் முதல்வராகியிருக்கிறார். இதுதான் காங்கிரஸ், இதுதான் அரசியல்.


 

ashok gehlotஇந்திய வரைப்படத்தில் உச்சத்தில் இருக்கும் மாநிலம் ராஜஸ்தான். ராஜஸ்தானிகள் மற்ற மாநில மக்களை விட தனித்தே தெரியும் வகையில் அவர்களது ஆடைகள் இருக்கும். அதேபோல் வீரத்திலும் அவர்கள் தனித்துவமானவர்கள். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் அங்கு தனித்துவம் நிறைந்து இருந்தாலும், அரசியல் என்பது மற்ற மாநிலங்களைப்போல்தான். தமிழகத்தில் திமுக அதிமுக போல், ராஜஸ்தானில் காங்கிரஸ் – பாஜக. மாறி மாறி ஆட்சிக்கு வரும்.

ராஜஸ்தான் சட்டசபையில் மொத்தம் 199 இடங்கள். 2018 டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலின் முடிவில் காங்கிரஸ் 99 இடத்திலும், பாஜக 73 இடத்திலும், பகுஜன் சமாஜ் கட்சி 6 இடத்திலும், சுயேட்சைகள் 13 இடத்திலும், மீதியுள்ள இடங்களை சிறு சிறு கட்சிகளும் கைப்பற்றின. இதில் ஆட்சி அமைப்பதற்கான இடங்களை விட கூடுதல் இடங்களை காங்கிரஸ் பெற்றதால் அந்தக்  கட்சியே ஆட்சி அமைத்துள்ளது. ராஜஸ்தான் மாநில முதல்வராக பதவிக்கு வரப்போகிறவர் இவர்தான் என ஒருவரை ராஜஸ்தானின்பெரும்பாலான மக்கள் எதிர்பார்த்த நிலையில் அதற்கு நேர் எதிரான இன்னொருவரை பதவியில் அமர்த்தியுள்ளது காங்கிரஸ் கட்சி தலைமை.

காங்கிரஸ் கட்சியின் வரலாறு என்றுமே வித்தியாசமானது. ஊழல் புகார் கூறி யாரை கட்சியில் இருந்து ஓரம் கட்டினார்களோ   அவரையே அழைத்து வந்து மீண்டும் பதவி தந்து சிம்மாசனத்தில் அமரவைத்து அழகு பார்ப்பது அதன் வழக்கம். அந்த சிம்மாசனத்துக்காக உண்மையாக உழைத்தவர்கள் தெருவில் நிற்பார்கள். அப்படித்தான் மாநில அரசியலில் ஓரம் கட்டிவைக்கப்பட்டவர், முதல்வராக தேர்வு செய்யப்பட்டு மீண்டும் பதவிக்கு வருகிறார்... அசோக்கெலாட். தீவிரமாக உழைத்த இளம் தலைவரான சச்சின் துணை முதல்வராகியுள்ளார்.

 

rahul gandhi sachin pilot ashok gehlot1951ல் இருந்து 1990 வரை ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது. 1952ல் காங்கிரஸை சேர்ந்த ஹீராலால் சாஸ்திரி, அதன்பின் வெங்கடாச்சாரி, அடுத்து ஜெய் நாராயணன் வியாஸ், பின்பு   டீக்காராமன், அதற்கடுத்து மோகன்லால் சுகாத்தியா, பிறகு பர்கத்துல்லா கான், ஹரி தேவ் ஜோஷ், ஜெகன்நாத், ஷிவ் சரண் மத்தூர், ஹீரா லால் தேவ்பூரா, ஹரி தேவ் ஜோசி என மாறி மாறி முதல்வர் நாற்காலியில் அமர்ந்தனர். மோகன்லால் சுகாத்தியா 1954ல் முதலமைச்சர் பதவியில் அமர்ந்தார். அது முதல் தொடர்ச்சியாக 17 ஆண்டுகள், அதாவது 1971 வரை முதலமைச்சராக பதவியில் இருந்தார். இவர் காலத்தில்தான் ராஜஸ்தான் மாநிலம் வளர்ச்சி பாதையில் தட்டுத்  தடுமாறி எழத்துவங்கியது. மாடர்ன் ராஜஸ்தானின் உருவாக்கத்துக்கு அடிக்கல் நாட்டியவர் இவர் என்கிறது ராஜஸ்தானின் வரலாறு.

இந்திராகாந்தி அம்மையாரால் நாட்டில் நெருக்கடி நிலை அறிமுகப்படுத்தப்பட்டு பின் அது திரும்பப் பெறப்பட்ட பின் நடைபெற்ற தேர்தலில் ஜெயபிரகாஷ் நாராயணன் தொடங்கிய ஜனதாதளம் கட்சி, ராஜஸ்தானில் காங்கிரஸ் சரித்திரத்தை உடைத்தது. 1977ல்   ஜனதா தளத்தின் சார்பில் பைரன் சிங் ஷெகாவத் முதலமைச்சராக பொறுப்பு ஏற்றார்.  30 மாதங்கள் ஆட்சி பொறுப்பில் இருந்தார். மத்தியில் ஜனதா கட்சியில் ஏற்பட்ட தலைமை மோதலால் ஆட்சி கலைந்தது. மீண்டும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும்   1980ல் ராஜஸ்தானின் சட்டசபையை கலைத்தது, முதல்வர் பதவியில் இருந்து இறங்கினார் ஜனதா தளம் ஷெகாவத். அதன்பின் அவர் முறையாக பாஜகவில் இணைந்தார். அதன்பின் ஒன்பது ஆண்டுகள் காங்கிரஸோடு மோதிக்கொண்டு இருந்தார்.
 

bairan singh shekawat

பைரன்   சிங்   ஷெகாவத்1989ல் பாஜக – ஜனதா தளம் கூட்டணி   138   இடங்களில்   வெற்றி   பெற்றது.  இரண்டாவது முறையாக   பைரன்   சிங்   ஷெகாவத்   முதலமைச்சராகப் பொறுப்பு ஏற்றார். இரண்டு ஆண்டுகளில் மீண்டும் ஆட்சியை கலைந்து, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஒரு வருடம் ஜனாதிபதி வழியாக ஆட்சி நடத்திய காங்கிரஸ் 1993ல் தேர்தலை நடத்தவைத்தது. மீண்டும் பாஜக-ஜனதா தளம் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. கடந்த காலத்தை விட இந்த முறை அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தது பாஜக. வெற்றி பெற்ற 98 எம்.எல்.ஏகள் பைரன் சிங் ஷெகாவத்தை முதலமைச்சராக தேர்வு செய்ய அவர் பொறுப்பு ஏற்றார்.

இந்த முறை 5 வருடங்கள் முழுமையாக ஆட்சி செய்தார் ஷெகாவத். இந்துத்துவ வெறியை பைரன் சிங் ராஜஸ்தானில்   வளர்த்தார். சாமானிய மக்களின் வாழ்க்கையில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. இதனால் மக்கள் அதிருப்தியில் இருந்தனர். அதனை கச்சிதமாக அறுவடை செய்தது காங்கிரஸ் கட்சி. 1998ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தேசிய அரசியலில் இருந்த அசோக்கெலாட்டை மாநில அரசியலுக்கு அனுப்பி அவருக்கு முதலமைச்சர் நாற்காலியை தந்தது. அப்போது ஒரு முறை கூட எம்.எல்.ஏ ஆகாமலேயே முதல்வர் வாய்ப்பைப் பெற்றார் அசோக் கெலாட். இப்போதும் அவர்தான் முதல்வராகியிருக்கிறார். 

அந்த அளவுக்கு இவர் மதிக்கப்பட காரணம் என்ன? அரசியலில் இவர் வளர்ந்து வந்த கதை என்ன?  அப்போது முதல்வராக என்ன சாதித்தார், இப்போது முதல்வராக இவரிடம் என்ன எதிர்பார்க்கலாம்? அடுத்த பகுதியில் பார்க்கலாம்.     

முந்தைய பகுதி :

முத்தத்தால் சர்ச்சைக்கு ஆளான முதல்வர்! முதல்வரைத் தெரியுமா #9 

அடுத்த பகுதி:

பாஜகவை சமாளிக்க இவர்தான் சரி? - முதல்வரைத் தெரியுமா? #11 

 

 

 

Next Story

அன்பு பரிசு வழங்கிய ராகுல் காந்தி; முதல்வர் மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சி!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Rahul Gandhi who gave the gift of love CM MK Stalin resilience

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இத்தகைய சூழலில் கோவை செட்டிபாளையத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுயும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் நேற்று (12.04.2024) ஒரே மேடையில் பரப்புரை மேற்கொண்டார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாக சிங்காநல்லூர் பகுதியில் உள்ள சாலையின் தடுப்புச் சுவரை தாண்டி குதித்து ஒரு ஸ்வீட் கடைக்குச் சென்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்காக இனிப்பு வாங்கும் வீடியோ ஒன்றை ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், அங்குள்ள ஊழியர்கள், கடையின் உரிமையாளர் ஆகியோர் அவரை வரவேற்று அவருடன் கைகுலுக்கி மகிழ்கின்றனர். அப்போது அருகில் இருந்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கடை ஊழியரிடம் மைசூர் பாக் கொடுங்கள் என்று கேட்கிறார். யாருக்காக ஸ்வீட் வாங்குகிறீகள் சார் என்று கடையில் பணிபுரியும் பெண் பணியாளர் ஒருவர் கேட்கிறார். அவரிடம் என் சகோதரர் ஸ்டாலினுக்காக என ராகுல் பதிலளிக்கிறார்.

அதனைத் தொடர்ந்து கடையில் பணிபுரியும் ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு அங்கிருந்து ராகுல் காந்தி, விடைபெற்றார். அதன் பின்னர் பொதுக்கூட்டத்தில் தான் வாங்கி வந்த இனிப்பை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் ராகுல் காந்தி கொடுத்தார். அதனை முதல்வர் மு.க ஸ்டாலினும் மிகவும் மகிழ்ச்சியாகப் பெற்றுக் கொண்டார். மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒரு கணம் நெகிழ்ச்சி அடைந்தார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, “தமிழ்நாட்டில் தொடர் பிரச்சாரத்துக்கு இன்னும் கொஞ்சம் இனிப்பை சேர்க்கிறேன். என்னுடைய சகோதரர் ஸ்டாலினுக்காக கொஞ்சம் மைசூர் பாக் வாங்கினேன்” என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

Next Story

'மோடிக்கு பிடித்தது தோசையா வடையா என்பது பிரச்சனை அல்ல; தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார்? - கோவையில் ராகுல் காந்தி பேச்சு

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
'Whether Modi likes dosa or vada is not the problem; The question is what did he do to Tamil Nadu' - Rahul Gandhi's speech in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் கோவை, செட்டிபாளையத்தில்  திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். முன்னதாக நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி தற்பொழுது கோவை வந்துள்ள நிலையில் இருவரும் ஒரே மேடையில் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், ''நாடாளுமன்றத்தில் அதானி  பற்றி பேசிய போது என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது பெரிய தத்துவ போராட்டம் நடக்கிறது. மோடி அரசு போக வேண்டிய நேரம் இது. மத்தியில் உள்ளது மோடி அரசு அல்ல இது அதானியின் அரசு. அதானி விரும்பியதால் சில மாதங்களில் மும்பை விமான நிலையம் அவரது கைக்குச் சென்றது. அதானியின் சலுகைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசியதால் என் மீது நடவடிக்கை பாய்ந்தது. எம்பி பதவி மட்டுமின்றி எனது வீட்டையும் பறித்தனர். இந்திய மக்களின் இதயத்தில் பல லட்சம் வீடுகள் எனக்கு உள்ளது. தமிழர்களின் வீடுகள் எனக்காக எப்போதும் திறந்திருக்கும். எனது வீட்டை எடுத்துக் கொண்ட போது கூட நான் கவலைப்படவில்லை. தமிழர்களுக்கு எனத் தனியாக வரலாறு இருக்கிறது. தமிழர் இளைஞர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனை நீட். நீட் தேர்வு வேண்டுமா வேண்டாமா என்பதை, உங்கள் வசமே விட்டு விடுகிறோம். வேலைவாய்ப்பின்மையைப் போக்க, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சட்டத்தை கொண்டு வருவோம். அரசு பணிகளில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்.

இங்கு வந்தால் தோசை பிடிக்கும் என்று கூறும் மோடி இங்கிருந்து சென்றதும் தமிழ் மீது தாக்குதல் நடத்துகிறார். தோசை மட்டுமல்ல மோடிக்கு வடையும் கூட பிடிக்கலாம். ஆனால் பிரச்சனை இப்போது அதுவல்ல. தமிழ் மொழி பிடிக்குமா என்பதே கேள்வி.  எங்கள் மொழி மீது ஏன் தாக்குதல் நடத்துகிறீர்கள் எனத் தமிழ் மக்கள் மோடியிடம் கேட்கிறார்கள். மோடிக்கு தமிழ்நாட்டை பிடிக்குமா? அப்படி என்றால் தமிழர்களுக்காக அவர் என்ன செய்தார். தமிழகத்தில் இருந்து வெளியே சென்றதும் ஒரே மொழி ஒரே நாடு என்று சொல்கிறார் மோடி''என்றார்.