Skip to main content

டிஜிட்டல் சதுரங்க வேட்டை; ராஜஸ்தானில் மட்டும்  193 குரூப்கள்; பகுதி – 23

Published on 02/06/2023 | Edited on 02/06/2023

 

Digital Cheating part 23

 

வீடியோவில் சிக்கிய பின் அவர்களை எப்படி மிரட்டுவிங்க? 

 

வீடியோ ரெக்கார்ட் உருவானதும் அதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து மற்றொரு குரூப்புக்கு செல்போன் நம்பரோடு தருவோம். நாங்கள் யூடியூப் நிர்வாகத்தில் இருந்து பேசுகிறோம் அல்லது டெல்லி க்ரைம் ப்ராஞ்ச் அலுவலகத்தில் இருந்து அதிகாரி பேசுகிறேன், சிபிஐ அதிகாரி பேசுகிறேன். நீங்கள் ஆபாச சாட்டிங் செய்துள்ளீர்கள், ஆபாச வீடியோக்களை அடிக்கடி பார்ப்பதாக எங்களுக்கு ரிப்போர்ட் வந்துள்து. நீங்கள் நிர்வாண வீடியோ, வெப்சைட் பார்க்கும் வீடியோ காட்சிகள் எங்களிடம் உள்ளது. உங்கள் மீது வழக்கு போடப் போகிறோம் என புகைப்படத்தை அனுப்பி மிரட்டுவோம். 

 

போட்டோவை பார்த்துவிட்டு அவர்கள் எங்களை தொடர்புக்கொண்டால் அந்த எண் உபயோகத்தில் இருக்காது. சிபிஐ, சைபர்செல், சிஐடி, கூகுள் நிர்வாகத்தின் பெயரைச் சொல்லி மிரட்டி பணம் பறிப்போம்.

 

நிர்வாணமாக வீடியோவில் சிக்கியவர்களை மிரட்ட சிபிஐ பெயரை பயன்படுத்தியதை சொன்னதும் விசாரணை அதிகாரிகள் மிரண்டுள்ளனர். இவர்களே மிரண்டார்கள் என்றால் பொதுமக்கள் எப்படி பயந்திருப்பார்கள் என யோசித்துப் பாருங்கள்.    

 

இது ஒருவழி என்றால், நேரடியாக எங்காளுங்களே ‘இதோ பார், நீ நிர்வாணமா இருக்கற வீடியோ’ என ஸ்கிரீன்ஷாட் அனுப்பி உன்னோட செக்ஸ் வீடியோ இருக்கு, அதை நெட்ல போட்டுடுவோம்னு ஆரம்பிச்சி பணம் கேட்பாங்க.

 

 படிக்காத நீங்க எப்படி பார்ன் வெப்சைட் உருவாக்குனிங்க?

 

பணம் தந்தால் அப்படியொரு வெப்சைட் உருவாக்கித் தர ஆட்கள் இருக்காங்க. இதற்கான பயிற்சியை எங்களுக்கு ஜார்கண்ட் ஜம்தாராவை சேர்ந்தவர்கள் நேரில் வந்தும் கற்றுத் தந்தாங்க. ஆன்லைன் க்ளாஸ்களும் எடுத்தாங்க என பார்ன் வெப்சைட் வழியாக எப்படி ஆன்லைன் சீட்டிங் நடத்தியதை விவரித்துள்ளான்.

 

பார்ன் வெப்சைட் முதலில் உருவாக்குவோம். அந்த லிங்க்கை பரப்புவோம். 100 பேருக்கு அனுப்பினால் 90 பேர் அதனை கிளிக் செய்து பார்ப்பார்கள். அது ஆபாச வெப்சைட் எனத் தெரிந்த பின்பும் 80 பேர் பார்ப்பார்கள். அவர்கள் அதில் உள்ள வீடியோவை பார்ப்பார்கள். இரவில் லைவ் வீடியோ ஒளிபரப்பாகும் என சொல்வோம். 50 பேராவது லைவ் வீடியோ பார்க்க உள்ளே வருவார்கள். அப்படி பார்க்கும்போது அவர்கள் மொபைல், லேப்டாப்பில் பார்த்தால் அதிலுள்ள கேமரா வழியாக நாங்கள் அவர்கள் செய்வதை ரெக்கார்ட் செய்து கொள்வோம். பின்பு அந்த படத்தைக் காட்டி மிரட்டுவோம் என்றுள்ளார்.

 

இதுபற்றி புனே மாநகர சைபர் செல் இன்ஸ்பெக்டர் மீனல் பாட்டேல் கூறும்போது, ஆன்லைனில் கவனமாக இருக்க வேண்டும். பேஸ்புக், ட்விட்டர் என எதையாவது பார்த்துக்கொண்டு இருப்போம். இல்லை, ஏதாவது பொருட்கள் வாங்க வெப்சைட் ஓபன் செய்து பார்த்துக்கொண்டு இருப்போம். அப்போது திடீரென ஒரு பாப்-அப் வரும். அதனை கிளிக் செய்தால் ஆபாசத்தளத்துக்கு அழைத்து செல்லும். மறுபுறம் ஒரு பெண், தனது ஆடைகளை அவிழ்த்துவிட்டு நிர்வாணமாகப் பேசிக்கொண்டு இருப்பார். அந்த பக்கத்துக்கு வந்து வீடியோ பார்க்கும் நபரையும் பார்க்கச் சொல்வார். உடைகளை அவிழ்க்கும்போது அதனை ரெக்கார்ட் செய்துகொள்வார். லைவ் வீடியோ எனச் சொன்னாலும் உண்மையில் அது லைவ் இல்லை. ரெக்கார்ட் செய்யப்பட்ட வீடியோவை ஓடவிட்டு உள்ளே வரும் சபலிஸ்டுகளை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டுவார்கள் என்கிறார்.

 

வாட்ஸாப், இன்ஸ்டாகிராம் வழியாகவும் எதிரில் இருப்பவர்களிடம் எங்கள் வீட்டு பெண்களை ஆபாசமாக பேச வைத்தும் நிர்வாணமாக வீடியோவில் தோன்றி அதனை வேறு ஒரு மொபைலில் இருந்து வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டி பணம் கேட்போம் என்றுள்ளனர் சிக்கியவர்கள்.

 

இது ஏதோ அந்த கிராமம் மட்டும்மல்ல. பரத்பூரில் உள்ள காம்டி கிராமமும் இப்படிப்பட்ட குற்றங்களின் மைய கிராமம் எனப்படுகிறது. பரத்பூர் ஜீர்ஹெரா காவல்நிலையத்திற்கு வாராவாரம் இந்தியாவின் பிற பகுதியைச் சேர்ந்த காவல்துறையினர் வந்து சம்பந்தப்பட்ட சைபர் க்ரைம் குற்றவாளிகளை தூக்கிச் செல்வது வாடிக்கை. 

 

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டம், ராய்பூர் சுகேதி கிராமத்தில் பதுங்கியிருந்த ஷெஹ்பாத்கான் என்பவனை சஹாகர் காவல்நிலைய போலிஸ் உதவியோடு 2023 ஜனவரி 13ஆம் தேதி கைது செய்தது புனே தத்தவாடி காவல்நிலைய சப்–இன்ஸ்பெக்டர் ஹசன் முலானி தலைமையிலான டீம். இவன் நாடு முழுவதும் நடைபெற்ற செக்ஸ்டார்ஷன் குற்றங்களில் முக்கியமானவன். இவனால் பலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இவனை நீதிமன்றத்தில் நிறுத்தி புனே சிறையில் அடைத்தனர்.

 

ராஜஸ்தான் மாநிலம் ஜீரஹாரா காவல்நிலையத்துக்கு உட்பட்ட நாக்லாகுந்தன் கிராம மக்களுடன் துப்பாக்கி சூடு, கண்ணீர் குண்டு வீசி சண்டை போட்டு ஹதிமுகமத், ஹசன், அசாரூதீன், அக்தர்கான், சதாம், சோயிப், மற்றொரு சதாம் என 7 பேரை பிடித்தனர் அல்வார் மாவட்ட எஸ்.பி அமன்தீப் சிங் கபூர் தலைமையிலான போலிஸார். 

 

இந்த 7 பேர் மீது ஆந்திரா, கர்நாடகா, பீகார், உத்தரப்பிரதேசம், டெல்லி என 14 மாநில போலிஸாரால் செக்ஸ்டார்ஷன் வழக்குகள் உட்பட பல க்ரைம் குற்றத்தின் கீழ் தேடப்படுபவர்கள். ஆன்லைன் க்ரைம் வழியாக மக்களிடமிருந்து பறித்த பணத்தில் இவர்கள் வாங்கிப் பயன்படுத்திய 7 டிராக்டர்கள், 3 கார்கள், 3 இருசக்கர வாகனங்கள், 1 மடிக்கணினி, 7 மொபைல், 34 வங்கி கணக்கு புத்தகம், 12 ஏ.டி.எம் கார்டுகள், 3.5 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

 

இப்படி கடந்த சில ஆண்டுகளில் மட்டும் செக்ஸ்டார்ஷன் தொழிலை செய்த 193 குரூப்களை ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் மட்டும் பிடித்துள்ளது போலிஸ்.

 

அதன்பின் அது தடுக்கப்பட்டுவிட்டதா?

 

தொடரும்… 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

நான்கு மாநில தேர்தல் முடிவுகள்; வெளியான முன்னிலை நிலவரம்

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

 Four state election results; Published lead status

 

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டமாக தேர்தல்கள் நடந்து முடிந்தது. தொடர்ந்து தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

 

முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. காலை 8:30 மணி நிலவரப்படி தெலுங்கானாவில் 27 இடங்களில் காங்கிரஸ் முன்னிலையிலும், பிஆர்எஸ் 17 இடங்களிலும், பாஜக ஒரு இடத்திலும், மற்றவை ஆறு இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

 

மத்தியப் பிரதேசத்தில் பாஜக 65 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், காங்கிரஸ் 37 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ராஜஸ்தானில் பாஜக 45 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், காங்கிரஸ் 36 இடங்களிலும், மற்றவை இரண்டு இடங்களில் முன்னிலையில்உள்ளன. சத்தீஸ்கரில் 29 இடங்களில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ள நிலையில் பாஜக 23 இடங்களில் முன்னணியில் உள்ளது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

தொடங்கியது நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

 Counting of votes for four state assembly elections has begun

 

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் தேதியை கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து பல கட்டமாக தேர்தல்கள் நடந்து முடிந்தது.

 

தொடர்ந்து தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்குவதையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

வடகிழக்கு மாநிலமான மிசோரமில் மட்டும் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை அங்கு தேவாலயங்களில் வழிபாடு நடக்கும் என்பதால் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற கோரிக்கைகள் எழுந்தது. அதனைத்தொடர்ந்து மிசோரமில் மட்டும் வாக்கு எண்ணிக்கையானது நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ளது.  இந்நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்