Skip to main content

என்னை மட்டும்தான் பார்க்கணும்; இளம்பெண்ணை மிரட்டிய காதலன் - டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு: 15

Published on 01/07/2023 | Edited on 01/07/2023

 

Detective Malathi's Investigation: 14

 

தான் சந்தித்த வழக்கில் ஒரு சைக்கோ போல நடந்து கொண்ட காதலன் குறித்த வழக்கு பற்றி நம்மிடம் முதல் பெண் துப்பறிவாளர் மாலதி விவரிக்கிறார்.

 

முன்பெல்லாம் காதல் என்பது அனைத்து கடமைகளையும் முடித்த பிறகு செய்யும் ஒரு விஷயமாக இருந்தது. இப்போது வாழ்க்கையே என்னவென்று தெரியாத பிள்ளைகளுக்கும் காதல் வருகிறது. மூன்று நான்கு பேரைக் காதலித்த பிறகு தான் பலர் திருமணத்திற்கே வருகின்றனர். ஒரு தாய் நம்மிடம் வந்தார். தன்னுடைய மகளுக்கு ஒரு தொடர்பு இருக்கிறது என்றும் அதை நாங்கள் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்றும் கூறினார். ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னுடைய பெண்ணுக்கு ஒரு காதல் இருந்திருக்கிறது என்றும் அவளைத் தாங்கள் மீட்டு வந்துள்ளதாகவும் அவர் கூறினார். 

 

அவருடைய பெண் தற்போது ஒரு ஆபீஸில் கடைநிலை ஊழியராக வேலை செய்து வரும் ஒரு பையனைக் காதலித்து வந்தார். பிளஸ்டூ படித்து வந்த அந்தப் பெண், தன்னுடைய பள்ளி சுற்றுலாவுக்கு சென்றார். அந்த நேரத்தில் அவளுடைய காதலன் அவளை யாருடனும் பேசக்கூடாது என்று சைக்கோ போல் அதிகம் டார்ச்சர் செய்ததால் அவனிடமிருந்து காப்பாற்றுமாறு தன்னுடைய தந்தையிடமே சென்று அந்தப் பெண் சொல்லிவிட்டாள். இப்போது அவளுடைய தந்தை மற்றும் தாய் புதிதாக என்னிடம் வருவது போல வந்தனர். போலீஸ் புகார் மூலம் இதை டீல் செய்யலாம் என்று நான் கூறினேன். 

 

அந்தப் பையனை நாங்கள் பின்தொடர ஆரம்பித்தோம். அவன் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனுடைய உறவினர் ஒருவர் அதிகாரமிக்க இடத்தில் இருந்தார். போலீஸ் ஸ்டேஷனுக்கு நாங்கள் சென்ற போது அவரும் அங்கு வந்தார். அந்தப் பெண்ணுக்கு விருப்பமில்லை என்பதால் இனி அவளைத் தொடர்பு கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தினோம். அந்தப் பையனும் ஒப்புக்கொண்டு இருவரும் பிரிந்தனர். அதன் பிறகு அந்தப் பெண் நன்றாகப் படித்து, திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறார். 

 

சில பல காதல்களுக்குப் பிறகு தான் காதல் என்றால் என்னவென்றே அனைவரும் புரிந்துகொள்கின்றனர். பல காதல்கள் என்பது தான் இன்றைய டிரெண்டாக இருக்கிறது. பொதுவாகவே நாங்கள் பெற்றோர் மூலமாகத்தான் குழந்தைகளுக்கு கவுன்சிலிங் கொடுப்போம். எங்களுடைய காலத்தில் வருமானத்துக்கு தகுந்தது போல் வாழச் சொல்லிக் கொடுத்தனர். இன்று திருமணமான உடனேயே பணக்கார வாழ்க்கை வாழ வேண்டும் என்கிற எண்ணம் பலருக்கு வந்துவிட்டது. அதனால் திருமணத்துக்கு முன்பே பல்வேறு கட்டளைகளை விதிக்கின்றனர்.

 

 

Next Story

தடம் மாறிய காதலன்; தடுமாறிய காதலி - டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு: 36

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
detective-malathis-investigation-36

பல்வேறு வகையில் தான் துப்பறிந்த சுவாரசியமான விசயங்களை நம்மோடு முதல் பெண் துப்பறிவாளர் மாலதி பகிர்ந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் காதலனை, துப்பறியச் சொன்ன ஒரு வழக்கு குறித்து நம்மிடையே விவரிக்கிறார்.

வெளிநாட்டிலிருந்து வந்திருந்த  ஒரு பெண் என்னிடம் கேஸ் குடுத்தார். அவர் தன் காதலனை கண்காணித்துச் சொல்லுமாறு கேட்டுக்கொண்டார். விவரம் கேட்டபிறகு, அவர் சொன்னது,  அந்த பெண்ணும் அவர் காதலனும் இங்கே பெங்களூரில் பொறியியல் படிப்பை ஒன்றாக படித்து, பின் வெளிநாட்டிற்கு சேர்ந்தே சென்று  ஒன்றாக வேலை பார்க்கின்றனர். இருவரும் காதல் ஏற்பட்டு, பின் இங்கே வந்து கொஞ்சம் செட்டில் ஆன பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து இந்தியா திரும்புகின்றனர். ஆனால் இங்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் அந்த காதலனின் போக்கு சரி இல்லை என்று உணர்கிறார். தன்னை ஒதுக்குவது, இரவு நெடுநேரம் போன் காலில் பிசியாக இருப்பது போன்ற அவரது நடவடிக்கையில் சந்தேகம் கொள்கிறார். எனவே கண்காணிக்க வேண்டி என்னிடம் வந்தார்.

நாங்கள் இதை ப்ரீ மேரிட்டல் வெரிஃபிகேஷன் என்று கருத்தில் கொண்டு, அந்த காதலனை பின் தொடர்ந்து கவனிக்க  ஆரம்பித்தோம். அந்த பையன் தன் வேலையை முடித்து கம்பெனியிலிருந்து வெளியே வரும்போது வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக போவதையும், அவர்கள் வெளியே அடிக்கடி அதிக நேரம் செலவு செய்வதையும் பார்த்தோம். பதினைந்து நாட்கள் பார்த்து உறுதி செய்த பின், நம்மிடம் புகார் கொடுத்த பெண்ணை அழைத்து, மீண்டும் ஒருமுறை இது இரு பக்கமும் தெரிந்த காதலா அல்லது ஒருதலை காதலா என்பதை தெரிந்து கொண்டோம். அந்த பெண்ணும் இருவரும் மனம் ஒத்து காதலித்து, திருமணம் செய்ய வேண்டியே இங்கு வந்தோம். திருமணத்திற்காகத் தான் ஒரு வேலையில் சேர்ந்து, செட்டில் ஆகி வந்தோம். ஆனால் ஆறு மாதங்களாகத் தான் அவனது  நடவடிக்கை சரி இல்லை என்றார்.

அவருக்கு வேறொரு காதல் இருப்பது போல இருக்கிறது என்று விஷயத்தை எடுத்துச் சொன்னோம். அதிர்ச்சியான அந்த பெண்ணிற்கு புரிய நேரம் எடுத்தது. முடிவு நீங்கள் தான் எடுக்கவேண்டும். யோசித்துக் கொள்ளுங்கள். வற்புறுத்தி அவரையே திருமணம் செய்து, பின்னர் நீங்கள் விவாகரத்து வரை போக வேண்டி இருக்கும். எனவே, பேசி முடிவெடுங்கள் என்றோம். இது பெற்றோர் வரை தெரிந்து இருந்ததால், அவர்களையும் கூப்பிட்டு பேசி விஷயத்தைச் சொன்னோம். ஒரு அளவுக்கு மேல் குடும்பத்திற்குள் நாங்கள் தலையிட முடியாது என்பதால், மனமுடைந்திருக்கும் பெண்ணை பார்த்துக் கொள்ளுமாறு ரிப்போர்ட்டை கொடுத்தோம். காதலில் ஒருவரை காதலித்தால் உண்மையாக இருக்க வேண்டியது முக்கியம். பிரிவையும் முறையாக அறிவித்து பிரிய வேண்டும். ஒருவரை காதலித்து விட்டு இன்னொரு உறவுடன் பழகுதல் என்பது தவறாகும். 

Next Story

பெற்றோருக்கு இரட்டை அதிர்ச்சி தந்த மகன்; அதிர்ச்சியூட்டிய லிவ்இன் ரிலேஷன்ஷிப்-  டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு: 35

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
detective-malathis-investigation-35

பல்வேறு வகையில் தான் துப்பறிந்த சுவாரசியமான விசயங்களை நம்மோடு முதல் பெண் துப்பறிவாளர் மாலதி பகிர்ந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் பெற்றோரே தன் மகனை துப்பறியச் சொன்ன ஒரு வழக்கு குறித்து நம்மிடையே விவரிக்கிறார்.

நல்லபடியாக பள்ளிப்படிப்பு, கல்லூரி முடித்து வேலைக்கு போன பொறுப்பான பையன், எந்த விதமான கெட்ட பழக்கவழக்கமோ, தவறான நடத்தையோ இல்லாமல் இருந்தவன். வேலைக்கு போக ஆரம்பித்ததும் வேலை பார்க்கும் இடமும் வீடும் மிக தூரமாக இருந்ததால் வெளியே ஹாஸ்டலில் தங்கிக் கொண்டான். திருமணம் குறித்த பேச்சை எடுத்தாலே இப்போதைக்கு வேண்டாம் என்று தள்ளிப் போட்டுக்கொண்டே போகிறான். அவனுடைய செயல்பாடுகளிம் மாற்றம் தெரிவதாக உணர்ந்த பெற்றோர் அவனை கண்காணிக்கச் சொல்லி நம்மிடம் வந்தார்கள்.

நாமும் ஒரு பையனைத் தானே கண்காணிக்க போகிறோம் என்று சாதாரணமாக நினைத்தால் சற்றே கடினமாகத்தான் இருந்தது. அவர் எந்த ஹாஸ்டலில் தங்கி இருந்தார் என்ற தகவல் இல்லை. ஆனால், வேலை செய்த ஐடி கம்பெனி வாசலில் போய் காத்துக்கிடப்போம், ஆயிரக்கணக்கில் வண்டி உள்ளே போகும் வரும், அதில் இவரின் வாகன எண்ணை மட்டும் வைத்துக்கொண்டு பின் தொடர்வோம். அதுவும் ஹெல்மெட் வேறு போட்டு இருப்பார், அவர் தானா என்ற சந்தேகத்தோடு தான் பின் தொடர்வோம். பல நாட்கள் கழித்து அவரை ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைவதை கண்டு பிடித்தோம்.

நல்லவேளை அந்த அடுக்குமாடி குடியிருப்பு 16 வீடுகளை மட்டுமே கொண்டிருந்தது. ஆனாலும் உள்ளே போய் விசாரிக்கவில்லை, காத்திருந்தோம். ஒரு நாள் பெண் ஒருவரோடு வெளியே வந்தார், அவர்களின் நெருக்கம் கண்டிப்பாக கணவன் மனைவியாக இருப்பார்கள் என்பதை உறுதிப்படுத்தியது. இந்த தகவலை அந்த பையனின் வீட்டிற்கு எடுத்துச் சொன்னோம், பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்த பெற்றோருக்கு இரண்டு அதிர்ச்சி, ஒன்று தன்னுடைய மகன் தங்களுக்கு சொல்லாமல் ஒரு பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்துகிறார் என்பதும் மற்றொன்று அந்த பெண் அவனின் சித்தி பொண்ணு அதாவது அவனுக்கு தங்கை உறவு முறை. அவளுடன் குடும்பம் நடத்துகிறார் என்பது தெரிந்து அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

குடும்ப உறவுகளில் ஒரே குல தெய்வத்தை கும்பிடுகிறவர்களில் பெண் கொடுத்து பெண் எடுக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் பங்காளி முறை வருவார்கள். வேறு குலசாமி கும்பிடுபவர்களில் இருந்து தான் பெண் எடுப்பார்கள். ஏனெனில் அவர்கள் தான் மாமன் மச்சான் உறவு வருவார்கள் என்பார்கள். இதையெல்லாம் சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்கும் பட்சத்தில் உறவுகளுக்குள்ளான வித்தியாசங்கள் உணர்வார்கள். அண்ணனும் தங்கையும் திருமணம் செய்துகொள்கிற நெருடல், உறவுச்சிக்கல் வராமல் தவிர்க்கலாம்.