Skip to main content

ஆதனூர் சோழன் எழுதும் பாஜகவின் ஊழல்கள் ஏ டூ இஸட்!!! பகுதி- 15


புனே பாஜக தலைவரின் நில ஊழல்!  PUNE LAND SCAM (MAHARASHTRA)

மகாராஸ்டிரா மாநிலம் புனேவில் பாஜக-சிவசேனா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ராஜ் புரோஹித். 1995-1999 காலகட்டத்தில் இவர் போலியான ஆவணங்களை பயன்படுத்தி, நகர்ப்புற நில கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் சில உத்தரவுகளை பிறப்பித்தார். இதன்மூலம், நிலம் கையகப்படுத்துதலில் இருந்து புனேவுக்கு விலக்கு அளித்தார். இது 2005ல் அம்பலமானது. இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம் தனிநபர்கள் ஆயிரக்கணக்கான சதுர அடி நிலத்தை கைப்பற்ற அவர் உதவியிருப்பது தெரியவந்தது. 

உத்தரப்பிரதேச பாஜக அரசின் பெட்ரோல் பம்ப் ஊழல்! PETROL PUMP SCAM (UP)

 

nmஒரு பெட்ரோல் பம்ப்புக்காக சாலையை அகலப்படுத்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத்தின் முதன்மை செயலாளர் ஷஷி பிரகாஷ் 25 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. ஹர்டோய் நகரில் பெட்ரோல் பம்ப் இருக்கும் சாலை குறுகலாக இருந்ததாகவும், அதை அகலப்படுத்தும்படி உரிமையாளர் கேட்டதாகவும், அதற்காக 25 லட்சம் ரூபாய் கேட்டதாகவும் புகார் கூறப்பட்டது.

ரேசனில் 36 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல்!  PDS SCAM (CHHATTISGARH)

 

bnசத்தீஷ்கர் மாநில பாஜக முதல்வர் ராமன் சிங் ரேசன் வினியோகத்தில் முறைகேடு செய்து 36 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தது அம்பலமானது. மக்களுக்கு வழங்க வேண்டிய ரேசன் அரிசியில் முறைகேடு செய்திருப்பதை மாநில லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆவணங்களுடன் கண்டுபிடித்தனர். ரேசன் வினியோக கழகத்தின் 36 அலுவலகங்களில் அவர்கள் நடத்திய சோதனையில் 36 ஆயிரம் கோடி ரூபாம் மீட்கப்பட்டது. இந்த ஊழலில் பாஜக அரசுக்கு இருக்கும் தொடர்பை உறுதிப்படுத்தும் ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

பியூஷ்கோயல் ஊழல்!  PIYUSH GOYAL SCAM

மோடி அரசில் மத்திய அமைச்சரான பியூஷ்கோயல் அரசுக்கு தெரிவிக்க வேண்டிய உண்மையை மறைத்து மத்திய அமைச்சர் பொறுப்பில் இருந்தார். அதாவது மத்திய அமைச்சராக இருப்பவர் வேறு நிறுவனங்களில் பங்குகளோ, பொறுப்புகளோ வகிக்கக்கூடாது. ஆனால், பியூஷ்கோயலும் அவருடைய மனைவியும் ப்ளாஷ்நெட் இன்போ சொல்யூசன்ஸ் (இந்தியா) லிமிடெட் என்ற கம்பெனியில் இயக்குனர்களாக இருந்திருக்கின்றனர். இந்த உண்மையை பியூஷ்கோயல் அரசுக்குத் தெரிவிக்காமல் மறைத்திருந்தார். உண்மை வெளியாகி அவர்கள் பொறுப்பிலிருந்து விலகினாலும், அந்த நிறுவனத்தின் 99 சதவீத பங்குகளை அவர்கள் வைத்திருந்தனர். 
 

 

nbபியூஷ் கோயலின் மனைவிக்கு 10 ஆண்டுகளில் 3 ஆயிரம் மடங்கு லாபம்! PIYUSH GOYAL-SHIRDI INDUSTRIES SCAM

அமித் ஷா மகன்  ஒரே ஆண்டில் ஆயிரம் மடங்கு லாபம் சம்பாதித்து சாதனை புரிந்ததைப் போல, பியூஷ் கோயலின் மனைவிக்கு சொந்தமான ஒரு நிறுவனம் 10 ஆண்டுகளில் 3 ஆயிரம் மடங்கு லாபம் சம்பாதித்து சாதனை புரிந்தது. பாஜகவினருக்கே சொந்தமான இந்த சாதனை அரசியலில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. பியூஷ் கோயலின் மனைவி சீமா 1 லட்சம் ரூபாய் முதலீட்டில் ஒரு கம்பெனியை தொடங்கினார். அது 10 ஆண்டுகளில் 30கோடி ரூபாய் சம்பாதித்தது. அதுபோல, ராகேஷ் அகர்வால், முகேஷ் பன்சாலி என்ற பியூஷ்கோயலின் நண்பர்களுக்குச் சொந்தமான ஷிர்டி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்ற கம்பெனிக்கு பல்வேறு வங்கிகளுக்கு எந்த ஆவணங்களும் இல்லாமல் 650 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கேள்வித்தாள் அம்பலத்தில் ஊழல்!  QUESTION PAPER LEAK SCAM

2017 ஆம் ஆண்டு மத்திய அரசு நடத்திய ஒருங்கிணைந்த பட்டதாரிகளுக்கான சிஜிஎல் தேர்வுக்கான எஸ்எஸ்சி கேள்வித்தாள்களும் அதற்குரிய விடைத்தாள்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மாணவர்கள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார்கள். வேலைவாய்ப்பில் மோசடி செய்யும் மிகப்பெரிய குழு ஒன்றுக்கு இதில் தொடர்பு இருப்பதாக சொல்லப்பட்டது. இந்த தேர்வை 9 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஊழல் தொடர்பாக மோடி அரசு ஒரு வார்த்தைகூட விளக்கம் அளிக்கவில்லை. எதையும் கண்டுகொள்ளாமல் மவுனமாக இருந்தால் அந்த பிரச்சனை காணாமல் போகும் என்ற மோடி அரசின் செயல்பாடுகளுக்கு இதுவும் ஒரு உதாரணமாக ஆனது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்