Skip to main content

ஆதனூர் சோழன் எழுதும் பாஜகவின் ஊழல்கள் ஏ டூ இஸட்!!! பகுதி- 16

நர்மதா மரம் நடு ஊழல் (மத்தியப்பிரதேசம்)  NARMADA PLANTATION SCAM (MADHYA PRADESH)

 

gh

 

2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி மத்தியப்பிரதேசத்தை ஆட்சி செய்த பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அரசு நர்மதை ஆற்றின் இரண்டு கரைகளிலும் 6 கோடி மரக்கன்றுகளை நட முடிவெடுத்தது. ஒரே நாளில் நட முடிவெடுக்கப்பட்டு, அதற்காக 102 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பழக் கன்றுகளையும், பழம் தராத கன்றுகளையும் நடுவதற்கு முடிவெடுக்கப்பட்டாலும், இதற்கான அரசு மதிப்பீடு வெளியிடப்படவே இல்லை. இந்த திட்டம் குறித்து சமூக செயற்பாட்டாளர் வினாயக் பரிகர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்தத் திட்டத்தில் ஒரு கோடி மரக்கன்றுகள் கூட உயிருடன் இல்லை என்று அவர் தணிக்கை ஆதாரங்களுடன் அறிக்கை வெளியிட்டார். அவசரக் கோலத்தில் திட்டத்தை அமல்படுத்தியதால் ஏற்பட்ட பாதிப்பே இது என்றும் அவர் கூறினார். இந்தத் திட்டத்தில் நிகழ்ந்த ஊழல் குறித்து சில சாமியார்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தபோது, அவர்களுக்கு மாநில இணை அமைச்சர் அந்தஸ்த்தை வழங்கி அவர்களுடைய வாயை அடைத்தது பாஜக அரசு.

வைர வியாபாரி நிரவ் மோடியின் ஊழல் NIRAV MODI SCAM
 

ghmஇது பாஜக ஆதரவுடன் நடைபெற்ற மிகப்பெரிய ஊழல் ஆகும். இந்தியா இதுவரை கண்டிராத வங்கி மோசடி என்று கூறப்படும் இதில் குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடியும் அவருடைய உறவினர் மெஹுல் சோக்ஸியும் சம்பந்தப்பட்டார்கள். பஞ்சாப் நேஷல் வங்கியில் 22 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று அதை கட்டாமல் இந்தியாவை விட்டு தப்பினர். நிரவ் மோடி, சோக்ஸி, வங்கியின் சில அதிகாரிகள் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த மோசடி குறித்து 2016 ஆம் ஆண்டிலேயே பிரதமர் அலுவலகம், செபி, அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவற்றுக்கு புகார்கள் அனுப்பப்பட்டன. ஆனால் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்தப் புகார்கள் இருக்கும் நிலையிலேயே, 2018 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி டாவோஸ் நகரில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் அவருடன் நிரவ் மோடியும் மேடையில் அமர்ந்திருந்தார் என்பது பலத்த சர்ச்சையை உருவாக்கியது.

ராணுவத்துக்கு ஒதுக்கிய நிதியை விழுங்கிய பாஜக!  NORTH CACHAR HILLS SCAM (ASSAM)

 

jhஅசாம் மாநிலத்தில் உள்ள வடக்கு கச்சார் மலை மாவட்டத்தில் தீவிரவாதத்தை ஒடுக்க அரசு ஒதுக்கிய நிதியில் சுமார் ஆயிரம் கோடி ரூபாயை இரண்டு பாஜக தலைவர்கள் விழுங்கியிருக்கிறார்கள். ஜுவல் கர்லோஸா, நிரஞ்சன் ஹோஜாய் என்ற அவர்கள் இருவர் மீதும் வழக்குத் தொடரப்பட்டு , 2017 ஆம் ஆண்டு இருவருக்கும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. நிதியை விழங்கிய இருவரும் பாஜக தலைவர்கள் மட்டுமில்லாமல், டிமா ஹலம் டாவோகா என்ற தீவிரவாத குழுவின் தலைவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அந்தக் குழு பின்னர் கலைக்கப்பட்டது என்பது அதிர்ச்சியான தகவலாக வெளியானது. அரசு ஒதுக்கிய நிதியிலிருந்து தங்களுடைய தீவிரவாதக் குழுவுக்கு ஆயுதங்களை வாங்கி இந்தியாவுக்கு எதிராக போராட்டத்தை தொடர இந்த தேச பக்தர்கள் திட்டமிட்டார்கள். இதுதான் பாஜகவின் தேசபக்தி லட்சணம்.

டாடாவுக்கு ஒதுக்கிய நிலத்தில் ஊழல்! (குஜராத்) NANO PLANT LAND SCAM (GUJARAT)

 

jklமேற்கு வங்கத்திலிருந்து வெளியேறிய டாட்டாவின் நானோ கார் தயாரிப்பு நிறுவனத்தை குஜராத் அரசு வரவேற்றது. இந்தத் தொழிற்சாலைக்காக ஆயிரத்து நூறு ஏக்கர் அரசு நிலம் வழங்கப்பட்டது. இந்த நிலத்தின் அன்றைய மார்க்கெட் மதிப்பு சதுர மீட்டருக்கு 10 ஆயிரம் ரூபாயாக இருந்தது. ஆனால், சதுரமீட்டருக்கு வெறும் 900 ரூபாய் விலையில் டாடாவுக்கு தாரை வார்க்கப்பட்டது. இந்த வகையில் டாடாவுக்கு 33 ஆயிரம் கோடி ரூபாய் சலுகை காட்டப்பட்டது. இதில் பாஜக அரசுக்கு குறிப்பிட்ட கமிஷன் வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

நகர்ப்புற வீடுகட்டும் திட்டத்தில் மோடியின் ஊழல் NULM SCAM

 

kjlமோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு நகர்ப்புற வாழ்க்கைத்தர மேம்பாட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. நகர்ப்புற மக்களுக்காக வீடுகட்டித் தருவதற்கான திட்டம் இது. இதற்காக மத்திய அரசு 1078 கோடி ரூபாய் ஒதுக்கியது. ஆனால், இந்த நிதியில் வெறும் 208 வீடுகளை மட்டுமே மத்திய அரசு கட்டியது. இந்தத் திட்டத்தை அமல்படுத்தியதில் ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் உண்மை இருப்பதாக உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்தது. இதுதொடர்பாக மோடி அரசு தாக்கல் செய்த பதில்மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் “இது மிகப்பெரிய ஊழல். திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பணம் எங்கே போனது?” என்று கேள்வி எழுப்பியது.

நீட் தேர்வில் ஊழல்! NEET SCAM

 

jklநீட் தேர்வைப் பயன்படுத்தி மிகக்குறைந்த கல்வித்தகுதியுடைய 3 ஆயிரம் பேர் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து, அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை மருத்துவ படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டதாக மத்தியப்பிரதேச பாஜக அரசின் வியாபம் ஊழலை அம்பலப்படுத்திய டாக்டர் ஆனந்தராஜ் அம்பலப்படுத்தினார். இதற்காக ஒரு மாணவருக்கு 25 லட்சம் ரூபாய் முதல் 1 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்டதாக அவர் ஆதாரத்துடன் தகவல் வெளியிட்டார். அதுமட்டுமின்றி, முதுகலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வை நடத்துவதற்காக எந்த அரசு அறிவிக்கையும் வெளியிடாமல் சுமார் 320 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டரும் வழங்கப்பட்டது என்று ஆனந்த்ராஜ் தெரிவித்தார்.

குஜராத் பாஜக தலைவர்களின் கற்பழிப்பு குற்றங்கள்! NALIA SCAM (GUJARAT)

19 வயதுப் பெண் ஒருவரை குஜராத் மாநில பாஜக தலைவர்களில் ஒருவரான சாந்திலால் சோலன்கி என்பவர் வேறு இருவருடன் சேர்த்து கூட்டு வன்புணர்வு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட அந்தப் பெண், “நான் மட்டும்தான் தைரியமாக அவர்கள் மீது குற்றம் சாட்டுகிறேன். மேலும் பல பெண்கள் பயந்துபோய் இருக்கிறார்கள்” என்றார். குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் அப்டஸா தாலுகாவின் பாஜக பிற்பட்டோர் பிரிவு அமைப்பாளராக சோலன்கி இருக்கிறார். இத்தகைய பாலியல் குற்றங்களில் சுமார் 60 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், குழந்தைகளையும் பாஜக தலைவர்கள் சீரழித்திருப்பதாக கட்ச் போலீஸார் தெரிவித்தனர்.

பாஜக தலைவரின் ஆயுதபேர ஊழல்!  OPERATION WEST END

 

jklஇது வாஜ்பாய் அரசில் நடந்தது. 2001 ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்த சமயத்தில் பாஜகவின் தலைவராக பங்காரு லட்சுமணன் என்பவர் பொறுப்பு வகித்தார். அப்போது, ராணுவத்துக்கு ஆயுதம் சப்ளை செய்வதற்கு தங்களுக்கு அனுமதி பெற்றுத்தர வேண்டும் என்று அவரிடம் லஞ்சம் கொடுக்கப்பட்டது. இது ரகசிய கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டு தெஹல்கா இணையப் பத்திரிகையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்த பங்காரு லட்சுமணன் மீது ஊழல் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கேஸ் ஆவியாகமல் தடுக்க 80 கோடி ஏப்பம்! ONGC SCAM

 

jமத்திய அரசு நிறுவனமான இந்தியன் ஆயில் கார்பரேஷன் எரிவாயு ஆவியாகாமல் தடுக்க கருவிகளை வாங்க விரும்பியது. இதற்காக அரசு வகுத்த வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்காமல் டீப் இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்துக்கு 312 கோடி ரூபாய்க்கு ஓஎன்ஜிசி நிறுவனம் ஆர்டர் கொடுத்தது. ஆனால், போதுமான தொழில்நுட்ப தேவைகளை நிறைவேற்ற அந்த தொழிற்சாலையால் முடியவில்லை. எனவே, இந்த வகையில் ரூ.80கோடி ஓஎன்ஜிசிக்கு இழப்பு ஏற்பட்டது.

 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்