தாம்பத்திய உறவுக்கு மறுப்பு தெரிவித்த மனைவி குறித்த ஒரு வழக்கு பற்றி நம்மிடையே வழக்கறிஞர் சாந்தகுமாரி விவரிக்கிறார்.
பரசுராம் என்றவரின் வழக்கு இது. கல்யாணமாகி திருவான்மியூரில் மனைவியுடன் வசித்து வந்தவர் இவர். மனைவி தன்னுடன் தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ளவில்லையென்றும் 3,4 மாதங்கள் போன பின்பு பெரியவர்கள் கேட்ட பிறகுதான் மனைவி தன்னை தாம்பத்திய உறவுக்கு சேர்த்துக் கொள்ளவில்லை என்ற உண்மையை சொல்லி இருக்கிறார். சொன்ன பிறகும் மனைவியின் பெற்றோர்கள் அதை நம்பாமல் டாக்டரிடம் சென்று, டாக்டர் சொன்ன பிறகுதான் நம்பினார்கள். பின்பு பெற்றோர்கள் அந்த பெண்ணுக்கு பக்குவமாக எடுத்துச் சொல்லி கணவரிடம் விட்டு சென்றனர். அவரும் தனது மனைவிக்கு என்ன தேவையோ எல்லாவற்றையும் செய்து கொடுத்தார். அப்படி இருந்தும் மனைவி அருகில் நெருங்கும்போது அவள் திட்டியிருக்கிறாள்.
கணவன், மனையியாக இருந்தால் தாம்பத்திய உறவு முக்கியம் என்று கணவரும் நிறைய சொல்லிப் பார்த்திருகிறான். என்ன சொன்னாலும் அவன் மனைவி அதைப்பற்றி துளி கூட யோசிக்கவில்லை. சில நாட்ளுக்கு பிறகு தனது மாமனார், மாமியாரை பிடிக்கவில்லையென்று மனைவி அவனிடம் கூறி அவர்களை வேறு இடத்திற்கு மாற்று என்று அவள் சொல்ல, அதற்கு அவன் அதெல்லாம் முடியாது என்று கூறியிருக்கிறான். இதையெடுத்து அவளே மாமனார், மாமியாவை விரட்ட அடிக்கடி சில பிரச்சனை செய்து சண்டை போடுகிறாள். அதன்பிறகு மாமனார், மாமியார் இருவரும் மருமகள் கொடுமையைத் தாங்க முடியாமல் ஹைதராபாத் சென்றுவிட்டனர்.
அதன் பிறகு அந்த பெண், வீட்டில் சாப்பாடு சமைக்காமல் ரகளை பண்ண ஆரம்பித்திருக்கிறாள். இதையெல்லாம் சகித்துக்கொண்டு சில நேரம் அந்த சமையலையும் அவனே செய்ய ஆரம்பித்து விட்டான். இரவு நேரத்தில் தன் கணவர் தன்னிடம் வருவார் என்று ஒரு நாள் வீட்டை விட்டு ஓடினாள் அந்த பெண். அந்தப் பையனும் வீதி வீதியாக தேடி எங்கேயாவது ஒரு இடத்தில் பார்த்து மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவான். பின்பு அந்த பெண்ணிடம் உனக்கு பிடிக்கவில்லையென்றால் உன்னுடைய அறையினுள் வரமாட்டேன் என்று சமாதனப்படுத்தியிருக்கிறான். என்றைக்காவது அந்த பெண் மாறும் என்ற நம்பிக்கையில்தான் தொடர்ந்து அந்த பெண்ணுடன் வாழ ஆரம்பித்தான். இருந்தும் அந்த பெண் மீண்டும் அதை செய்துள்ளது. இதையெல்லாம் தாங்கிக்கொள்ள முடியாத அந்த பையன் தன் மாமியாரிடம் கொஞ்சம் உங்க மகளுக்கு எடுத்து சொல்லுங்க என்னால் முடியவில்லை என்று சொன்னான்.
அதன் பிறகு அந்த பெண்ணுக்கு பல அறிவுரைகளை பெற்றோர்கள் கூறியிருக்கின்றனர். சொல்லும்போது சரி சரி என சொல்லிவிட்டு பின்பு கணவரை பலி வாங்க முடிவெடுத்தாள். ஆனால் அந்த பையன் இந்த பொண்ணுக்கு டிவி, உடை என எல்லாம் வாங்கி கொடுத்து சந்தோஷமாக வைத்துக் கொள்ள முயற்சித்தான் இருந்தும் உடல்ரீதியாக சின்ன சந்தோஷத்தைக் கூட அந்த பெண் அவனுக்கு தரவில்லை.
ஒரு நாள் இருவரும் வீட்டில் இருக்கும்போது மனைவி திடீரென சாமி ஆட ஆரம்பித்தாள். அதன் பின்பு கணவர் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை அழைத்து அவளுக்கு விபூதி அடித்து என்னவென்று கேட்கும்போது கல்கத்தா காளி என்று சாமி ஆடியுள்ளது. இதைப் பார்த்த அந்த கணவர், அதனாலதான் தாம்பத்திய உறவு தள்ளிப்போகுதா என்று யோசித்து மீண்டும் கொஞ்சம் விலகியிருந்து மனைவிக்கு தேவையானதை செய்து கொடுக்கிறான். அதோடு சமையலுக்கு புதிதாக ஒரு பணிப் பெண்ணையும் ஏற்பாடு செய்கிறான். இதையடுத்து அவன் மனைவி, சமையல் செய்ய வந்த பெண்ணை நோட்டம் விடுவதாக கூறி கணவருடன் மீண்டும் சண்டை போடுகிறாள். இதற்கிடையில் கணவர் தன் பெற்றோர்களிடம் பேசினால் அதற்கும் எதாவது இழுத்து சண்டை போடுகிறாள் இப்படியே கொஞ்ச நாள் போனது.
அதன் பின்பு ஒரு நாள் அந்த பையன் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வரும்போது, தன் மனைவி யாரிடமோ மொபைலில் பேசுவதைப் பார்க்கிறான். அதை அவன் ஒட்டுக்கேட்டும் போது, மனைவி தனது தோழியிடம் என் புருஷனிடம் சாமியாடுவது போல் ஆடி என் புருசனை காலில் விழ வைத்தேன், என கிண்டலாக பேசியிருக்கிறாள். இதையெல்லாம் பார்த்துவிட்டு இனிமேல் இவள் திருந்த மாட்டாள் என்று முடிவெடுத்தான். பின்பு ஒரு நாள் அவன் குளிக்க போகும் போது மொபைலை எடுத்து அதில் எதாவது பெண் நம்பர் இருந்தால் தன் முன்பு அந்த பெண்ணுக்கு கால் செய்ய வேண்டும் என்று மிரட்டியிருக்கிறாள். ஆனால் அந்த நம்பர் அவன் அலுவலத்திலுள்ள ஒரு பெண் உயர் அதிகாரியுடையது என்று சொல்லியும் அவள் கேட்பதாக இல்லை. பிறகு தான் அவனது மனைவிக்கு மனநல பிரச்சனை இருந்தும், அதை கண்டுகொள்ளாமல் போனதால்தான் இது போல அவள் நடந்திருக்கிறாள். இதை முன்பே மருத்துவர்களிடன் சென்று பார்க்காமல் அவளது பெற்றோர்கள் கல்யாணம் செய்து வைத்திருக்கின்றனர் என்பது அவனுக்கு தெரிய வருகிறது.
தன் மனைவியால் பல பிரச்சனையை சந்தித்து வந்த அந்த பையன், அவனது அப்பாவை தொடர்பு கொண்டு என்னால் இவளுடன் இருக்க முடியாது என்று கூற, அவர் அப்பா என்னிடம் அவனை அழைத்து வந்தார். அதன் பிறகு நான் விவாகரத்து வழக்குடன் இந்து திருமணச் சட்டப்படி 13(11ஏ), 13பி என்ற பிரிவின் கீழ் வழக்குகளை போட்டேன். வழக்கு மீடியேசனுக்கு போகும்போது, அங்கு தன்னை விட்டுவிட்டு தன் கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக அந்த பெண் பொய் புகார் சொன்னாள். இருந்தும் ஒரு வழியாக அந்த பெண்ணுக்கு அவர் வாங்கி கொடுத்த பொருட்களையெல்லாம் மீட்டு விவாகரத்து வாங்கி கொடுத்தோம். இப்படித்தான் இந்த வழக்கு முடிவுக்கு வந்தது.