Skip to main content

முதலில் டப்பிங் கொடுத்தார், அப்புறம் டஃப் கொடுத்தார்! விக்ரம் - அஜித்... சில ஒற்றுமைகள்! பழைய கதை பேசலாம் #4 

Published on 09/04/2020 | Edited on 11/04/2020


கரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி இருக்கிறது. பாதிப்பும் மரணங்களும் நாளுக்கு நாள் அதிகமாகும் சூழ்நிலையில் அரசின் அறிவுறுத்தல்படியும் மருத்துவர்களின் ஆலோசனைப்படியும் நாம் வீட்டிலேயே தனிமைப்பட்டு இருக்க வேண்டியது நம் கடமையாகிறது. இன்னும் சில நாட்கள் வீட்டில் பொழுதைக்கழிக்க சிரமப்படும் உங்களுடன் சுவாரசியமாக சில பல பழைய தமிழ் சினிமா கதைகளைப் பேசலாமே என்று தோன்றியது...

 

old vikram



தமிழ் திரையுலகில் எப்போதுமே பெரிய பின்புலமில்லாமல் வந்து ஜெயித்தவர்களுக்கு ஒரு தனி மரியாதை உண்டு.அதிலும் நீண்ட காலம் போராடி ஜெயித்தவர்களுக்கு நல்ல மதிப்பு உண்டு.இதற்கு, நடிகர்களில் நாம் அறிந்த சிறந்த உதாரணங்கள் அஜித், விக்ரம் போன்றவர்கள்.விக்ரம், ஒரு பெரிய வெற்றியைக் கொடுத்து சில ஆண்டுகளாகிவிட்டாலும் அவர் மீது அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களுக்கும் ஒரு மதிப்பு உண்டு.அவரது போராட்டம் அப்படி, போராடி வென்ற பொழுதில் அவர் ஏற்று நடித்த பாத்திரங்கள் அப்படி.

அஜித்திற்கும் விக்ரமிற்கும் சில ஒற்றுமைகள் உண்டு.விக்ரமின் தந்தை வினோத் தாஜும் நடிப்பு மீது ஆர்வம் கொண்டு வந்திருந்தாலும் சினிமாவில் பெரிதாக சாதித்தவரில்லை.நடிகர் தியாகராஜன்,விக்ரமின் உறவினராக இருந்தாலும் அந்த பின்புலமும் விக்ரமிற்கு பெரிதாக உதவவில்லை.அஜித்தைப் போலவே முதல் அறிமுகத்திற்கும் வெற்றிக்கும் மிகவும் கஷ்டப்பட வேண்டிய நிலைதான் விக்ரமிற்கு இருந்தது. இருவருமே திரைப்பட அறிமுகத்திற்கு முன் சில விளம்பரங்களில் நடித்துள்ளனர்.'என் காதல் கண்மணி' என்ற படத்தில் அறிமுகமான விக்ரமிற்கு அடுத்த படமாக தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனரான, இயக்குனர் ஸ்ரீதரின் 'தந்துவிட்டேன் என்னை' அமைந்தது. ஆனால் அந்தப் படமும் வெற்றி பெறவில்லை.

 

 

vikram torino AD

 

http://onelink.to/nknapp

 

ajith old AD



நடிப்பு முயற்சிகளின் ஆரம்ப கட்டத்திலேயே விக்ரமிற்கு நடந்த ஒரு விபத்தில் காலில் பெரிய முறிவு ஏற்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக நடக்க முடியாமல் இருந்து, தனது நம்பிக்கையாலும் முயற்சியாலும் மீண்டு வந்தார். பின்னாளில் 'தூள்', 'சாமி' போன்ற சில படங்களில் அவர் ஓடுவது வித்தியாசமாக இருப்பதைக் கிண்டல் செய்தவர்களும் உண்டு.ஆனால், அதன் காரணம் அந்த காயம் என்பது பலருக்கும் தெரியாது. அஜித்திற்கும் சினிமா வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே பெரிய விபத்து நடந்து முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே.

இப்படிச் சில ஒற்றுமைகள் இருந்தாலும் 'ஆசை' படத்தின் மூலமாக அஜித்திற்கு வெற்றி சற்று சீக்கிரமே அமைந்தது.விக்ரம், அதற்கு பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.ஆனால், அவர் தன் துறையை விட்டுச் செல்லவில்லை. தொலைக்காட்சி தொடர்கள், பிற நடிகர்களுக்கு டப்பிங் பேசுதல் என்று சினிமாவிலேயேதான் இருந்தார்.அஜித்தின் முதல் படமான அமராவதியில் அஜித்திற்கு டப்பிங் கொடுத்தவர் விக்ரம்.அப்பாஸ், பிரபுதேவா போன்றோருக்கும் அவர்கள் நாயகனாக நடித்த முதல் படங்களில் குரல் கொடுத்தது விக்ரம்தான். அழகான இளம் நாயகனாக அஜித் பிரபலமான பிறகு அவருடன் இணைந்து 'உல்லாசம்' படத்தில்   நடித்தார் விக்ரம்.அதுவும் வெற்றி பெறாமல் போனது.ராதிகாவுடன் இணைந்து 'சிறகுகள்' என்ற டெலிஃபிலிமில் நடித்தார் விக்ரம்.

 

vikram ajith



இப்படி நீண்டுகொண்டே போன அவரது வெற்றியை நோக்கிய தேடல், பாலாவின் 'சேது' படத்தின் மூலம் வென்றது.அதன் பிறகு 'தில்', 'ஜெமினி' 'தூள்' என மேலே வந்த விக்ரம் 2003ஆம் ஆண்டில் உச்சத்தில் இருந்தார்.விஜய், அஜித் இருவருக்குமே கடும் டஃப் கொடுத்தார்.அந்த ஆண்டில் 'தூள்', 'காதல் சடுகுடு', 'சாமி', 'பிதாமகன்' என அவரது நான்கு படங்கள் வெளியாகின.'காதல் சடுகுடு' தவிர பிற மூன்று படங்களும் பெரிய வெற்றி.'பிதாமகன்' படத்திற்காகத் தேசிய விருதையும் பெற்றார் விக்ரம்.இப்படி, விக்ரம், 'சீயானாக' வெற்றி பெற்ற கதை, கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் போராட்டம்.உண்மையிலேயே நமக்கு உத்வேகம் கொடுக்கக்கூடியது.

இன்னும் சில கதைகள்...

அண்ணாமலை, பாட்ஷா... இரண்டிற்கும் முதலில் யார் டைரக்டர் தெரியுமா? பழைய கதை பேசலாம் #3

இவர் விஜய் ரசிகர், ஆனா ஒரு விஷயத்தில் அஜித் மாதிரி! பழைய கதை பேசலாம் #2

விஜய்க்கு மட்டுமல்ல விஜயகாந்துக்கும் அஜித்துக்கும் இது நிகழ்ந்திருக்கிறது! - பழைய கதை பேசலாம் #1 


 

 

 

Next Story

வீர தீர சூரனாக மாறிய விக்ரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
vikram 62 title as Veera Dheera Sooran

தமிழ் சினிமா ஹீரோவில், ஹேட்டர்ஸே இல்லாத எல்லா தரப்பு மக்களுக்கும் பிடித்தமான நடிகராக வலம் வருபவர் விக்ரம். தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு உயிரூட்டும் வகையில் தனது அர்ப்பணிப்பை கொடுக்கும் முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர். முன்னணி நடிகர் என்ற அந்தஸ்து பெற்றாலும் தொடர்ச்சியாக வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அவர் நடித்த காசி, பிதாமகன், அந்நியன், தெய்வத்திருமகள், ஐ உள்ளிட்ட படங்கள் அவரது அர்ப்பணிப்பிற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன. 

அந்த வரிசையில் தற்போது தங்கலான் படம் உருவாகி வருகிறது. மேலும் சித்தா பட இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். இந்தச் சூழலில் இன்று பிறந்தநாள் காண்கிறார் விக்ரம். அதனால் ரசிகர்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தங்கலான் படக்குழு, விக்ரமிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு ஸ்பெஷல் வீடியோவை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து தற்போது அருண் குமார் படக்குழு தற்போது படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டுள்ளது. ரியா ஷிபு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு ஒரு ப்ரோமோ வீடியோவுடன் கடந்த அக்டோபரில் வெளியானது. மேலும் துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

இப்படத்திற்கு ‘வீர தீர சூரன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் டைட்டில் டீசர், படத்தின் ஒரு காட்ச்சியை கட் செய்து வைத்துள்ளனர். விக்ரமை கொலை செய்ய ஒரு கும்பல், திட்டமிட்டு அவர் வேலை பார்க்கும் மளிகை கடைக்கு செல்கிறது. ஆனால் அக்கும்பலை விக்ரம் துப்பாக்கியால் தாக்குகிறார். இந்த டீசர் தற்போது ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. 

Next Story

சர்ப்ரைஸ் கொடுத்த தங்கலான் படக்குழு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
pa.ranjith Thangalaan Vikram Birthday Tribute Video

தமிழ் சினிமா ஹீரோவில், ஹேட்டர்ஸே இல்லாத எல்லா தரப்பு மக்களுக்கும் பிடித்தமான நடிகராக வலம் வருபவர் விக்ரம். தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு உயிரூட்டும் வகையில் தனது அர்ப்பணிப்பை கொடுக்கும் முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர். முன்னணி நடிகர் என்ற அந்தஸ்து பெற்றாலும் தொடர்ச்சியாக வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அவர் நடித்த காசி, பிதாமகன், அந்நியன், தெய்வத்திருமகள், ஐ உள்ளிட்ட படங்கள் அவரது அர்ப்பணிப்பிற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன. 

அந்த வரிசையில் தற்போது தங்கலான் படம் உருவாகி வருகிறது. இந்த சூழலில் இன்று பிறந்தநாள் காண்கிறார் விக்ரம். அதனால் ரசிகர்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தங்கலான் படக்குழு, விக்ரமிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு ஸ்பெஷல் வீடியோவை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளது. அதில் அவரது கதாபாத்திரத்திற்காக அவர் தயாராகும் முறையை மற்றும் அவரது அர்ப்பணிப்பை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. 

pa.ranjith Thangalaan Vikram Birthday Tribute Video

இப்படத்தை பா. ரஞ்சித் இயக்கி வரும் நிலையில், விக்ரமோடு பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ள நிலையில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் தள்ளி போய் இம்மாதம் வெளியாவதாக பின்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் ரிலீஸ் தேதி அறிவித்தபாடில்லை. இந்த சூழலில் தற்போது வெளியாகியுள்ள ஸ்பெஷல் வீடியோவில் விரைவில் இப்படம் வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.