Yuvraj Singh

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான அனில் கும்ப்ளேவுக்கு, யுவராஜ்சிங் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான அனில் கும்ப்ளே இன்று தன்னுடைய 50-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையடுத்து, அவருக்கு விராட் கோலி, சேவாக், ஐசிசி, பிசிசிஐ உட்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், அனில் கும்பிளேவுக்கு வாழ்த்து தெரிவித்து யுவராஜ்சிங் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவினைப் பதிவிட்டுள்ளார்.

Advertisment

அதில் அவர், "எப்போதெல்லாம் நான் உத்வேகம் தேவையென நினைத்தேனோ, அப்போதெல்லாம் எனக்கு உத்வேகம் அளித்தவர். பிறந்தநாள் வாழ்த்துகள் அனில் கும்ப்ளே. இந்திய கிரிக்கெட்டிற்கு நீங்கள் அளித்த பங்களிப்பும், இளம் வீரர்களை உருவாக்குவதில் நீங்கள் அளித்த பங்களிப்பும் விலைமதிப்பில்லாதது. வயதில் அரைசதம் கண்ட இந்நாளில், எனது அன்பையும், வாழ்த்துகளையும் உங்களுக்கு அனுப்புகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.