இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திரம் யுவராஜ் சிங், கடந்தாண்டு ஓய்வு பெற்றார். சர்வதேச மற்றும் இந்தியாவின் உள்ளூர்ப் போட்டிகளிலும் விடைபெற்ற அவர், வெளிநாட்டு லீக்போட்டிகளில் மட்டும் ஆடிவந்தார்.
இந்தநிலையில், பஞ்சாப்மாநிலகிரிக்கெட்வாரியம், யுவராஜ்சிங்கிடம், பஞ்சாப் அணிக்காக ஆடுமாறும், பஞ்சாப்அணி வீரர்களுக்கு வழிகாட்டியாக இருக்குமாறும் கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட யுவராஜ் சிங், மீண்டும் தன்னைபஞ்சாப் அணிக்காக ஆட அனுமதிக்குமாறு இந்திய கிரிக்கெட் வாரியத்திற்குக் கடிதம் எழுதினார்.
ஓய்வு முடிவிலிருந்து வெளியில் வருவது குறித்துபேசியயுவராஜ்சிங், பஞ்சாப்மாநில அணிக்காககோப்பையை வெல்லவேண்டும்என்ற விருப்பமே ஓய்வு முடிவில்மாற்றத்திற்கான காரணம்எனத் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், 'சையத்முஷ்டாக் அலி ட்ரோஃபி'க்கான பஞ்சாப் அணியின்30 பேர்கொண்ட உத்தேச அணியில்யுவராஜ் சிங் இடம்பெற்றுள்ளார். இதன்மூலம், யுவராஜ்மீண்டும் பஞ்சாப் அணைக்காக விளையாடியது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இந்திய கிரிக்கெட்வாரியம், உள்ளூர்ப் போட்டியில்ஆடஅனுமதி அளித்துவிட்டால், ரசிகர்கள் மீண்டும் ஒருமுறை, யுவராஜின் அதிரடியைப் பார்க்கலாம்.
சூதாட்டப் புகாரில்தடைவிதிக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், தடைக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, கேரளமாநிலஅணியின் உத்தேசவீரர்கள் பட்டியலில்இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.