Skip to main content

உலகக் கோப்பை இறுதிப் போட்டி: யார் மகுடம் சூட அதிக வாய்ப்பு?

Published on 19/11/2023 | Edited on 19/11/2023

 

World Cup Final: Who has the best chance of winning the crown?

 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டம் எப்படி விறுவிறுப்பாக இருக்குமோ அந்த அளவுக்கு ஆஸ்திரேலிய அணி உடனான போட்டியும் இருக்கும். சமீப காலங்களில் பாகிஸ்தான் அணியுடன் அதிக போட்டிகளில் விளையாடாத காரணத்தால், பாகிஸ்தான் அணி உடனான போட்டியை விட ஆஸ்திரேலியா அணி உடனான போட்டியே அதிகம் எதிர்பார்ப்பை கூட்டுகிறது. மேலும் 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது.

 

அந்த தோல்விக்கு பதிலடி தரும் வகையில் 20 வருடங்களுக்குப் பிறகு இன்று ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது. இதற்கு இடையில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் நாக் அவுட் போட்டிகளில் சில முறை மோதி கொண்டாலும், குறுகிய வடிவிலான போட்டிகளில் 2003 க்கு பிறகு தற்போது இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இறுதிப் போட்டியில் சந்திக்க உள்ளன. 2003இல் ஆஸ்திரேலியா அணி எப்படி வலிமை வாய்ந்த அணியாக இருந்ததோ, அதேபோல தற்போது இந்திய அணி வலிமை வாய்ந்ததாக உள்ளது.

 

இறுதிப் போட்டி நடைபெறும்  அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானதாக இருப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என நடைபெற்ற போட்டிகள் நமக்கு காட்டுகின்றன. கிரிக்கெட் விமர்சகர்களும் இந்த மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு அதிகம் சாதகமாக இருக்கும்  என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ஆடுகளம் மெதுவாகவும் இருக்கும் என்று கூறியுள்ளனர்.

 

இதனால் இந்திய அணியில் மேலும் ஒரு சுழற்பந்து வீச்சாளர் இருந்தால் அது இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.  இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சிம்ம சொப்பனமாக விளங்கும் அஸ்வின், இந்திய அணியின் ஆடும் லெவனில் இருந்தால் அது கூடுதல் பலமாக இருக்கும் என்று சில கிரிக்கெட் விமர்சகர்கள்  கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஒரே அணியை வைத்துக்கொண்டு 5 போட்டிகளுக்கு மேல் வெற்றி பெற்று விட்டதால், கடைசி நேரத்தில் மாற்றம் தேவையில்லை என்று  கிரிக்கெட் விமர்சகர்களும், ரசிகர்களின் சிலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

 

எது எப்படி இருந்தாலும் இன்றைய போட்டியை வென்றே ஆக வேண்டும் என்கிற உயரிய நோக்குடன் இந்திய அணி விளையாடும் என்பதில் சந்தேகம் இல்லை. இதற்கிடையில் பைனல் குறித்து கருத்து தெரிவித்த கேப்டன் ரோகித், இந்திய அணிக்காக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவர்கள் நிறைய செய்துள்ளார். அவருக்காகவாவது, இந்த உலகக் கோப்பையை நாங்கள் வென்று அவருக்கு பரிசளிக்க வேண்டும் என்றார்.

 

அகமதாபாத் மைதானத்தில் இதுவரை 30 ஒரு நாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் 15 இல் முதலில் பேட்டிங் செய்த அணியும், 15 இல் இரண்டாவது பேட்டிங் செய்த அணியும் வென்றுள்ளன. இந்த உலகக் கோப்பையில் நடைபெற்ற நான்கு ஆட்டங்களில் சேசிங் செய்த அணியே மூன்று முறை வெற்றி பெற்றுள்ளது. இருந்தாலும், இறுதி ஆட்டம் என்பதால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட் செய்யவே விரும்பும். டாஸ் என்பது நம் கையில் இல்லாததால் டாஸ் யார் ஜெயித்தாலும் இந்தியா ஆட்டத்தை வென்று உலகக்கோப்பை கைப்பற்ற வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

 

வெ.அருண்குமார்  
 

 

 

 

Next Story

SA vs AFG : 56 ரன்களில் சுருண்டது ஆப்கானிஸ்தான் அணி!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
SA vs AFG: Afghanistan bundled out by 56 runs

டி20 உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி தொடங்கியது. இதில் ஆப்கானிஸ்தான் - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இருப்பினும் தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் திணறினர். ஆப்கானிஸ்தான் அணி ஐந்து ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 23 ரன்களை மட்டுமே எடுத்தது.

இறுதியாகத் தென்னாப்பிரிக்காவின் அபார பந்து வீச்சால் 11 ஓவரின் 5வது பந்தில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 56 ரன்களில் ஆப்கானிஸ்தான் அணி சுருண்டது. ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலம் டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் குறைந்த ரன்களில் ஆல் அவுட் ஆன அணி என்ற மோசமான சாதனையை ஆப்கானிஸ்தான் அணி படைத்துள்ளது. 57 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி களம் இறங்க உள்ளது.

டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இன்று (27.06.2024) இரவு 8 மணிக்கு இந்த போட்டி நடைபெற உள்ளது. 

Next Story

“எனக்கு வருத்தம் அளிக்கிறது” - ஆஸ்திரேலிய வீரரின் செயல் குறித்து முகமது ஷமி கருத்து

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

Mohammed Shami comments on the Australian player's action

 

ஒவ்வொரு கிரிக்கெட் அணியின் கனவாக இருக்கும் உலகக் கோப்பை ஒரு நாள் தொடர், வழக்கம் போல் கோலாகலமாக இந்தாண்டும் தொடங்கியது. தொடக்கத்திலிருந்தே ஒரு போட்டியில் கூட தோற்காமல் இந்திய அணி விளையாடியதால் நிச்சயம் கோப்பையைக் கைப்பற்றுவார்கள் என இந்திய ரசிகர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். மேலும் இந்தியாவில் இத்தொடர் நடைபெற்றதால் பெரும் ஆசையோடும் இருந்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கைக்கு எதிராக இறுதிப் போட்டி அமைந்தது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட இந்திய அணி தோல்வியைத் தழுவியது.  

 

இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியுற்ற நிலையில், பிரதமர் மோடி இந்திய அணி வீரர்களை டிரஸ்ஸிங் ரூமில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதே சமயம் ஆஸ்திரேலிய அணியின்  மிட்செல் மார்ஷ், வென்ற உலகக் கோப்பை மீது தனது காலை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த புகைப்படத்தை பார்த்த இந்திய ரசிகர்கள் சிலர், உலகக் கோப்பையின் மீது எப்படி கால் வைக்கலாம் என்று மிட்செல் மார்ஷ்க்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். 

 

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் முகமது ஷமி, மிட்செல் மார்ஷின் செயலுக்கு தனது வேதனையை தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய முகமது ஷமி, “நான் காயமடைந்திருக்கிறேன். அந்த உலகக் கோப்பைக்காக தான் உலக நாடுகள் அனைத்தும் போட்டியிடுகிறது. அந்த கோப்பையை தலைக்கு மேல் உயர்த்தி தூக்கிக்காட்ட வீரர்கள் விரும்புகின்றனர். அப்படி தலைக்கு மேல் வைக்க வேண்டிய கோப்பையில், காலை வைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை தரவில்லை” என்று கூறினார். ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் மார்ஷின் செயல் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.